பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9

வைத்து, பிறகு வணிகம் நடத்துவதற்குரிய முதலீட்டுப்பணமும் கொடுப்பதாகவும் கூறினார்கள்.


இவர்களது. உதவியை எமிலி ஒப்புக்கொள்ளவில்லை. தனது கணவரின் ஆசையை அவர்களிடம் கூறி, அதனை நிறைவேற்றவே திட்டமிட்டு வருகிறேன் என்றார் எமவி.


அவளிடம் மகனைப் படிக்க வைக்கும் அளவிற்குப் பணம் இல்லை; என்றாலும், படிக்கவைத்தே தீருவேன் என்ற மன உறுதி ஒன்று போதாதா? இறுதியில் ஓர் முடிவுக்கு வந்தாள் எமிலி என்ன முடிவு அது?


ஹாரோ என்ற குன்றின் மீது ஹாரோ என்ற உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கே தனது இரு மக்களையும் அழைத்துச் சென்று அந்தப் பள்ளியிலே சேர்த்துவிடவும், ஒரு வீட்டடை வாடகைக்கு எடுத்து அதிலே தங்கிக் கொண்டும், ஹாரோ பள்ளி மாணவர்களுக்காக ஒர் உணவு விடுதி நடத்தி அந்த வருவாயில் மக்களைப் படிக்க வைக்க முடியும் என்ற முடிவுக்கு எமிலி வந்தார். அதன்படி பிள்னைகனைப் பள்ளியில் சேர்த்தார்; உணவு விடுதியும் நானாவட்டத்தில் நன்றாகவே நடைபெற்று வந்தது. அதற்கு அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் அவளது கஷ்ட நிலைகளைக் கண்டு உதவியும் செய்தார்.


கல்வியில் ஹாரி சிறந்து விளங்கினார்: எமிலிக்கும் அதைக் கண்டு மகிழ்ச்சி; ஆன்னியும் தன்கு படித்தாள்! எமிலி உறவினர்களாக வந்தவர்களும் தங்கனால் முடித்த உதவிகளைத் தவறாமல் செய்து வந்தார்கள்.


தாயார் எமிலி அன்னிக்குரிய எல்லா மத ஒமுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். இவற்றுள் அன்னி இயேசு மீது காட்டிய அளவிலா அன்பும்-பற்றும் குறிப்பிடலாம்! ஒரே பெண் அல்லவா அன்னி அதனால் மகள் மீதும் அதிக ஆசை வைத்து வளர்த்து வந்தார் எமிலி,