பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அன்னி அன்றாடம் அடுத்த வீட்டுக்குப் போய் ஆடிப் பாடி மகிழ்வார்; அப்படி ஒருநாள் ஆடிப்பாடி ஓடிவந்த அன்னியின் அழகு நிகழ்ச்சியை, அந்த வீட்டிற்குப் புதிதாக வருகை தந்திருந்த விருந்தாளி அம்மையார் பார்த்து ரசித்தார்:


மான்குட்டி போல துள்ளிவந்த காட்சியினையும், அன்னியின் அழகும், உடற்பொலிவும், அறிவொளி படர்ந்த முகவழகும், இனிமையான, அமைதியான பேச்சழகும், அந்த அம்மையாரை வெகுவாகக் கவர்ந்து விட்டன.


அன்னியை அன்போடு அழைத்த அவர், தன் மடிமீது அமரவைத்துக் கொண்டு ஏதோ பேசுமாறு சில கேள்விகளைக் கேட்டார். இனிமையாக, அடக்கமாக, அமைதியாக, மகிழ்வு ததும்ப அன்னி பதில் கூறிய பாங்கு விருந்தாளி அம்மாவுக்கு மேலும் அன்பைப் பெருக்கிற்று.


அந்த அம்மையார் மறுதாள் அன்னி வீட்டிற்குள் வத்தார்! அன்னி உட்பட எமிலியும் சேர்ந்து அந்த அம்மாவை வரவேற்று உபசரித்தார்கள்.


விருத்தானி அம்மா. எமிலியை நோக்கி, அன்னிக்குரிய கல்வி, உணவு, உடை போன்ற செலவுகளூச் செய்து தான் வளர்த்து வருகிறேன். எனது சகோதரன் மகள் என்னுடன் தான் இருக்கிறாள். அவளுக்குத் துணையாக இருக்கும். நீங்கள் மனமார சம்மதித்து உத்திரவு தந்தால் என்னோடு அழைத்துப் போகிறேன், என்று கேட்டார்.


எமிலி அந்த முடிவை ஏற்கவில்லை. அப்போதும் அந்த அம்மையார்: அன்னியை விடுமுறைகள் வரும்போதெல்லாம் உங்களது வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன் அவனது கல்வி முன்னேற்றத்துக்கு நான் பொறுப்பு என்றார்.