உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11


எமிலி சிறிது நேரம் அமைதியாகச் சிந்தித்தார். நாம் மறுத்தக் கூறியும் கூட இந்த விருந்தாளி அம்மா ஏன் இள்வளவு விடாட்பிடியாக நம்மை வற்புறுத்துகிறார் என்று யோசித்தார்!


அன்னி ஒரு பெண். நாம் மாணவர்கள் பள்ளியிலே உணவு விடுதி நடத்துகிறோம். அது நல்லதல்ல. அன்னிக்கு கல்வி அளிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகையால், இந்த அம்மாவுடன் அனுப்புவதுதான் மிகவும் நல்லது; பொறுப்பானது என்று அந்த அம்மையாரைப் பார்த்து, சரி அம்மா அழைத்துச்செல்லுங்கள் என்றார். அன்னி, அம்மாவின் அன்புச் சொல்லுக்கு ஆட்பட்டு அந்தம்மாவுடன் சென்றார்.


அன்னியை உடன் அழைத்துச் சென்ற அந்த அம்மையாரின் பெயரி மிஸ் மேரியட். அவர் செல்வம் அதிகமாக உள்ள ஒரு சீமாட்டி கேப்டன் மேரியட் என்ற புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியரின் தங்கை, திருமணமாகாதவர்.


மிஸ் மேரியட் பெருந்தன்மை மிக்கவர்; நல்ல பண்பாளர்: கருணை உள்ளம் கொண்டவர்; அவருடைய ஆண்ணனின் மகள் ஒன்றையும் அவர் அன்னியைப் போல் வளர்த்து வருகிறார்!


அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் சேர்த்து கல்வியளிப்பதே மிஸ் திட்டம் ஒரு குழந்தைக்கும் பதிலாக இருவர் இருந்தால், அவர்கள் சேர்ந்து படிக்கவும் உண்ணவும், உறங்கவும், விளையாடவும் வசதியாக இருக்கும் என்பதால் அன்னியை அழைத்து வந்தார்:


அன்ன சத்திரமோ, தானமோ ஆயிரம் செய்வதை விட, ஒரு குழந்தைக்குக் கல்வி கற்பிப்பது சிறந்த ஓர் அறம் என்பதனை அவர்புரிந்தவர். அதனால், அன்னியை விடாப்பீடியாகத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தார்