நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
15
னால் உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்தை எல்லாம் செய்து முடித்து விட்டேன் இனி உனது வாழ்க்கை உன்னுடைய கையிலேதான் இருக்கிறது', என்று கூறியது தான் தாமதம்:
அன்னி மெய்மறந்து, உணர்ச்சி மேலிட்டு ஓவெனக் கதறினாள்: ஒரே அழுகை வளர்ப்புப் பாசம் முகமெலாம் கண்ணீரும்; வியர்வையும் முத்துக்களாகின: மேரியட் அன்னிக்கு ஆறுதல் கூறினாள்; அழாதே அன்னி; நினைக்கும் நேரமெலாம் வந்து போகலாம் நீ" என்று தட்டிக் கொடுத்து தேறுதல் கூறினாள்!
மேரியட் அன்னியின் கல்விக்காக எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகள், அக்கனவு உணர்வுகள், சாதாரண மானவை. பெற்ற தாயிடமும் பெற முடியாத எல்லாவித வசதிகள், வாய்ப்புகள், ஒழுக்க உணர்வுகள், சில வாழ்க்கை முறைகள் அனைத்தையும் அன்னி பெற்றாள். பிறமொழிகளான ஜெர்மன், பிரான்ஸ் மொழிகளைக் கற்க மேரியட் உதவினாள் இதனால், மிஸ் மேரியட் ஒரு சிறந்த செவிலித் தியாகவல்லியாகவும் திகழ்ந்தார்.
பழக்கத்தில் வளர்ந்த ஒழுக்கம் வழக்கமாகி விட்ட பிறகு, அதை மாற்றுவதென்பது மிகமிக அரிய செயலே ஆகும்.
மேரிட்டை விட்டுப் பிரிந்த அன்னி, ஹர்ரோவுக்கு வந்த பின்பு நேரத்தை வீணாக்கவில்லை. காலம் பொன் போன்றது என்று கூறிய அறிஞன் சிந்தனைக்கேற்ப, ஒய்வு நேரத்தில் சங்கீதம் கற்றார்.
நூலகத்து நூல்களை எல்லாம் புரட்டி புரட்டிப் பார்த்து ஏந்தி வந்து அதன் நுட்பங்களை எல்லாம் மனத்தில் பதித்தார்: