உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அன்னி பெசண்ட் அம்மையாரின்


இழந்த சொர்க்கம், மோட்சப் பயணம், சாக்ரடிஸ், பிளாட்டோ, தாந்தே, வேர்ட்ஸ் வோர்த், கூப்பர், ஷெல்லி, பைரன், கிட்ஸ், விட்மன், வால்டர்ஸ்காட், செனதே. ஸ்பென்சர், மில்டன். கிங்ஸ்லே சேக்ஸ்பியர் போன்ற எண்ணற்றோர் நூல்களை அக்கறையுடன் படித்தார். படித்தார் என்ப்து கூட சாதாரணப் பழக்கம்; அவற்றுடன் இரண்டற ஒன்றி விட்டார் எனலாம்:


அன்னிக்கு வில்வித்தைப்பயிற்சியும் உண்டு நாடோடி ராணி என்ற கருப்புக் குதிரை அன்னியிடம் இருந்தது. எப்போதும் அதன் மீதே சவாரி செய்து பிடித்தமான கிராமத்து மாதா கோவில்களுக்குச் செல்வார். ராஜா தேசிங்குக்கு நீலவேணி குதிரை ஒரு வீரப் பரியாக எப்படி இருந்ததோ, அதனைப் போல 'நாடோடி ராணியும்' அன்னிக்கு கிராம மக்களின் ஆறிவை வளர்த்து பரிதாபத்தையும் எழுப்பும் பாடக்குதிரையாக இருந்தது என்று கூறலாம்.


3. கணவன்-மனைவி இரு துருவங்கள்


அன்னிக்கு வயது பத்தொன்பது தன் தாயாருடன் அவர் தனது வீட்டுக்குச் சென்றார்: கிராமத்தில் மின்னி என்ற பெயருடைய ஒரு பென்! அன்னிக்கு அவள் உறவினள்! இருவருக்கும் ஒரே வயது தோழிகளாகவே பழகினர்


இவர்கள் கிராமத்துக்குச் சென்றபோது ஈஸ்டர் விழா நாள்; பண்டிகைக்கான ஏற்பாடுகள் அந்த மாதா கோவிலில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன!


சில நேரங்கள் இந்த மாதா கோவிலுக்குத்தான், அன்னி தனது நாடோடி ராணி என்ற குதிரை மீதமர்ந்து சவாரி செய்து கொண்டு வருவாள்! கிராம மக்களே