பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

17

அன்னியின் அஞ்சாமையினையும், அவளது அழகுச் சவாரித் தோற்றமும் கண்டு வியந்து போவார்கள்!


அதனால்தான் அந்த மாதா கோவில் என்றாலே அன்னிக்கும் மின்னிக்கும் தனியொரு பாசம் ஏற்படுவது உண்டு.


எனவே, ஈஸ்டர் விழாவிற்காக அந்த இரு கன்னிகளும் சேர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு கோவிலை வண்ண வண்ணமாக அலங்கரித்தார்கள். இறை பணி அல்லவா இளைஞர்களுக்கு ஒரே உற்சாகம் கொண்டாட்டம் அவர்களது கோலாகல ஆர்ப்பாட்டத்திலே கிராமமும் சேர்ந்து கொண்டது!


அந்த விழாவிலேதான் பிராங்க், பெசண்ட் என்ற ஒரு கதிய மனிதர் அறிமுகமானார்: இருபத்தெட்டு வயது பாளை மதபோதகர்! வணிகரின் மகன்! கேம்பரிட்ஜில் கல்வி கற்றவர்:


அன்னி எழிற் பூத்த பருவம் அடைந்தாலும், கள்ளம் கபடு, சூது வாது, உள்ளொன்று புறமொன்று, பேசாத பண்பினள்! எல்லாரிடமும் சரளமாகப் பழகும் தன்மையினள்!


அன்று வரை தனது திருமணத்தைப் பற்றியோ அல்லது குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்காத நிலயினள்!


அதனால்தான், கிராமத்து ஈஸ்டர் விழாவின் போது புதிதாக அறிமுகமான பெசண்ட்டுடன் எவ்விதக் களங்கமும் இல்லாமலே பேசினார் அன்னி!


அன்னியின் அழகு, அன்றைய அலங்காரம்: கள்ளமான வெகுளிப் பேச்சு, வடிக்கப்பட்ட சிலை ஒன்றுடன் பேசுவது