பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அன்னி பெசண்ட் அம்மையாரின்

போன்ற அவளது தோற்றம் அனைத்தும் மதபோதகரை ஈர்த்தன!


இந்த பேரழகுப் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டார். அன்னிக்கும் யார் இந்த பெசண்ட், என்ன அவன் வரலாறு என்பவை ஒன்றும் தெரியாது அறிமுகம் அன்றுதானே- புதுமுகம் தானே!


காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதன்றோ திருமணம்: இது எல்லாம் பெசண்டுக்குத் தெரியாது! ஏனென்றால், அவர்கள் இடையே மேரேஜ் சஸ் எ காண்ட்ராக்டு தானே!


பிராங்க் பெசண்ட் ஊருக்குப் புறப்படும்போது அன்னியிடம் வந்து, அன்னி! உன்னை நான் மணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்:


அதைக் கேட்ட அன்னி உடல் சிலிர்க்குமாறு திடுக்கிட்டார்; ஏனென்றால், திருமணத்தைப் பற்றி அவர் நினைத்ததும் இல்லை! தாயார் எமிலியும் அதுவரை திருமணம் என்ற சொல்லையே, அன்னி காதுகளில் ஒலிக்கவும் இடந்தரவில்லை! அதனால் அன்னிக்கு உள்ளம் சிலிர்த்தது:


திருமணம் என்பது தயார் செய்யும் முடிவு. அதற்கு அன்னி எப்படி, திடுதிப்பென்று சரி கூறமுடியும் மத போதகருககு இது கூடவா தெரியாது! தெரியும்; அழகு அவரை ஆட்டிப் படைத்து விட்ட ஆதிர்ச்சி பாவம்:


பிராங்க் பெசண்ட் எதிர்பாராவிதமாகத் திடீரென்று ஐ லவ் யூ ஐ மேரேஜ் யூ என்றால் எப்படி இருக்கும்: ஆதனால் பதிலேதும் கூறாமல் ஆப்படியே சிலைபோல நின்று விட்டார் பாவம் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று அவர் கணக்குப் போட்டு விட்டார்.