பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அன்னி பெசண்ட் அம்மையாரின்


இதற்குப் பிறகுதான், பிராங்க் பெசண்ட் அன்னியின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது அப்போதுதான் ஹாரியின் ஹாரோ படிப்பும் முடிந்தது! கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலே ஹாரி படிப்பதற்குச் சென்றார்.


அன்னிக்கும் பிராங்க் பெசண்ட்டுக்கும் செயிண்ட் வியோனார்ட்ஸ் என்ற இடத்திலே திருமணம் நடந்தது. இப்போதிலிருந்து அன்னியை அன்னி பெசண்ட் என்று அழைத்தார்கள்.


இங்கிலாந்து நாட்டு நாகரிகப்படி திருமணம் ஆன பெண்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால், அன்னி என்ற பண் அன்னி பெசண்ட் ஆனார்.


திருமணம் ஆன நாளில் இருந்தே அன்னிக்கும் அவரது கணவருக்கும் எந்தவித மனப் பொருத்தமும் இல்லை; ஏன்?


பிராங்க் பெசண்ட் மதபோதகராக இருந்ததால், அவரது மனம் பழைமையிலேயே ஊறிக் கிடந்தது. அதனால், அவர் பெண்களை அடிமை என்றே கருதி நடத்தி வந்தார்,


வீட்டு வேலைகளைச் செய்பவளே பெண்; அவள் வேலைக்காரிகளை வேலை வாங்கத்தான் தகுதி உள்ளவள்: கணவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கடவுளால் உருவாக்கப்பட்ட ஜென்மமே பெண் ஜென்மம்; மஞ்சத்திலே புரள்வதற்கும், அடி உதைகளை வாங்குவதற்கும் உரியவளே பெண்” என்பது பிராங்க் பெசண்ட் பெண்ணினத்தைப் பற்றி கருத்துடையவர்:


ஆனால், அன்னிபெசண்ட் அப்படிப்பட்டவள் அல்லள்: அவள் சுதந்தரமாக வளர்ந்தவள்; கட்டுப்பாடு என்ற வேலியே அவள் கண்டவளல்ல; ஆணும் பெண்ணும் சமமே