பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அன்னி பெசண்ட் அம்மையாரின்


ஏன் அப்படி அந்த நாவலில் அரசியலைக் கலந்து எழுதினார்? அப்போதைய இங்கிலாந்து நாட்டின் சமுதாயத்தில் பெண்களுக்குத் தன் நிலையைப் போலவே பிற பெண்களுக்கும் இருந்த அடிமை மனப்பான்மை நிலையைத் தான் அன்னிபெசண்டும் தனது நாவலிலே எதிரொலித்தார்!


பெண்கள் திருமணம் ஆகாதபோது வழங்கப்பட்ட சொத்துரிமை, திருமணமான பிறகு பறிபோய்விடும் நிலை இருந்ததை விளக்கி எழுதியிருந்தார்.


நாகரிகத்தில் சிறந்து விளங்கி, இங்கிலாந்து நாடு: பெண்கள் உரிமையை வழங்க மறுத்ததற்காக வருந்தவில்லை- வெட்கப்படவும் இல்லை.


பெண்ணினம், ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே இருந்தது; அதற்காக யாரும் கண்ணி சிந்தவோ, கவலைப்படுவதாகவோ இல்லை என்பதையே அன்னி பெசண்ட் அந்த நாவலிலே படம் பிடித்துக் காட்டினார்.


அந்த காட்சிகள் எல்லாம் அரசியல் உணர்வாக இருப்பதாகக் கூறி, ஃபேமிலி ஹெரால்டு பிரசுரிக்க மறுத்து, எழுதிய கதையைத் திருப்பி அனுப்பி விட்டது:


இங்கிலாந்து தாட்டு ஆட்சியிலே அப்போது எண்ணற்றோர் இவ்விதச் சமுதாயக் கொடுமைகளுக்குப் பலியாகிக் கொன்டிருந்தார்கள். அதிலே ஒருவராக அன்னி பெசண்டும் விளங்கினார்.


இந்த வாழ்க்கைப் போராட்டத்திலேயும் அந்தக் கணவனோடு வாழ்ந்து ஓர் ஆண் குழந்தையையும் பெற்றுவிட்டார் என்றால், அவர் எவ்வளவு சகிப்புத் தன்மையோடு வாழ்ந்திருக்கிறார் என்று நம் போன்றோர்க்குப் புரிகிறது அல்லவா?