பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அன்னி பெசண்ட் அம்மையாரின்

சாகட்டுமே என்று எண்ணிய அன்னி, அக்குழந்தை சாக மயக்க மருந்து கொடுத்து விட்டாள்.


மயக்க மருந்து குழந்தையின் உடம்புக்குள் சென்றதும் குழந்தை சாகவில்ல்ை மாறாக, குழந்தையின் நோய் குணமானது; சளி அடைப்பு அற்றுப் போயிற்று பிழைத்து விட்டது குழந்தை! இதை அறிந்து அன்னி இறைவனுக்கு நன்றி கூறி, நிம்மதியானாள்:


குழந்தை குணமான பின்பு அன்னியே நோயில் வீழ்ந்தாள்: படுத்தப் படுக்கையானாள்; நினைவை இழந்தார்; சிகிச்சையின் பலத்தால் அன்னி மீண்டாள்!


நோய் அதிகமாகி எழுந்தபோது, அன்னியின் என்னங்களே மாறிவிட்டன: மத நம்பிக்கையிலும் இறை வழிபாட்டிலும் தளர்வு உண்டாகி, விரக்தி விளைந்து, அதுவே மத நம்பிக்கைக்கு விரோதமாகவே மாறிவிட்டது


"என் வாழ்வில் மன அமைதி இல்லை. ஏதுமறியா என் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாகி உடல் மெலிந்து உருக்குலைந்தது. என் தாயாரோ, துரோகி ஒருவனால் ஏமாற்றப்பட்டுக் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். ஒளிமிகுந்த என் குறுகிய வாழ்வு அடிமைத் தளையில் சிக்கிச் சீரழிந்தது. நானும் மூன்றாண்டுகளுக்கு மேல் நோயால் அவதிப்பட்டேன். என்னுடைய மத நம்பிக்கை இன்று எனக்கு விரோதியாகி இருக்கிறது. நான் ஆண்டவனைத் தொழுதிட மறந்ததில்லை. அதாவது ஏழைகளுக்கு உதலிட மறந்ததில்லை. ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவிட மறுத்ததில்லை. இருந்தும் அவதிக்கு ஆளானேன்" என்று அன்னி பெசனண்ட் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.


வாழ்க்கையில் அவர் அனுபவித்த கஷ்டங்களே, இறைவனிடம் அன்னி கொண்டிருந்த அணைக்க முடியாத