பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

கணவருடன் 'சிட்செ' என்ற கிராமத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.


பிராங்பெசண்ட் அதே கிராமத்திற்கு மதகுருவாக நியமிக்கப்பட்டதால் அன்னி அவருடன் அந்த இடத்தில் வசித்தார். இப்போது மதகுரு சம்பளம், நானுாற்றுப் பத்துப் டவுனாக உயர்ந்தது: என்ன உயர்ந்தது என்ன பயன்?


அன்னியின் வாழ்வில் அமைதி அழிந்தது; கணவருடன் சுமூகமான தொடர்பு இல்லை. அடிமையாக அவரிடம் எத்தனை நாட்களுக்கு சண்டை சச்சரவுகளோடு, துன்ப வாழ்க்கை வாழ முடியும்?


மதம்தான் அன்னி வாழ்வின் துயரங்களுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்! இல்லற வாழ்வுக்கு வந்த இடுக்கண்களுக்குக் காரணமே மதம்தான் என்று உணர்ந்தார்:


கிறித்துவ மதத்திடம் அவர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் கொண்டிருந்தாரோ, அவ்வளவும் அவருக்கு மத எதிர்ப்பாக உருவெடுத்து விட்டது. நாளாகவாக அந்த எதிர்ப்பு மதத்தை விட்டே விலகிச் செல்லும் வெறுப்பாக மாறியது.


சிடசே கிராமத்து மாதாகோவில் மிக அழகானது. இக்கோவிலுக்கு அருகே மதகுருவுக்கும் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டில்தான் அன்னியும் கணவருடன் குடியேறி வாழ்ந்தார்.


அந்த கிராமம் ஒரு சிறிய ஊர்: படித்தவர்கள் மிகமிகக் குறைவு. உழவர் பெருமக்களும், தொழிலாளர்களும்தான் அங்கே அதிகமாக வாழ்ந்தார்கள் சில சிறு வியாபாரிகள், ஒன்றிரண்டு பேர் குடி இருந்தார்கள்.


தன்னைப் போல மற்றொரு மதகுரு குடும்பத்துடன்தான் அன்னி தொடர்பு வேறு யாரும் பேச்சுத் துணைக்