உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அன்னி பெசண்ட் அம்மையாரின்

குக் கிடையாது. மற்றவர்களுடன் பழக்க வழக்கத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கணவருடைய கட்டளை:


அன்னி வழக்கம்போல் புத்தகங்களைப் படிக்க இப்போது ஒய்வு நிரம்பக் கிடைத்தது காரணம், வீட்டு வேலை குறைவுதான்! இந்த ஓய்வுநேரம் அவருக்குக் கிறித்துவ மத எதிர்ப்பு நூல்களைப் படிக்க, சிந்திக்க கட்டுரைகள், கதைகள் எழுதும் வாய்ப்பாக அமைந்தன.


இந்த சமயத்தில் அன்னிக்கு உடல் நலம் பாதிப்படைந்தது. மருத்துவத்திற்காக அவர் லண்டனில் இருந்த தாய் எமிலி வீட்டிற்குச் சென்றார்.


இலண்டனில் நூற்களைப் படிக்கப் போதிய நேரம் கிடைத்ததால் இஸ்லாம், பெளத்தம், இந்து மதம் ஜைன மதம், கிறிஸ்துவ எதிர்ப்பு போன்ற நூற்களைப் படித்து, தனது சிந்தனையை வளர்த்துக் கொண்டார். இந்த நூல்களைப் படித்ததால் அவருக்கு மத நம்பிக்கை தளர்ந்து வந்தது.


இந்த நேரத்தில் தாமஸ் ஸ்காட் என்னும் ஒரு முதிய பகுத்தறிவாளர் தொடர்பு வீடேறி கிடைத்தது ஸ்காட் மத எதிர்ப்புக் கொள்கைகள் அன்னியினுடைய எண்ணங்கட்கு ஏற்றார் போலவே அமைந்தன.


இதை உணர்ந்த அந்த மூதறிஞர், அன்னி தனது கருத்துக்களை கட்டுரை உருவில் எழுதித் தந்தால் அதைப் பத்திரிகையிலே வெளிவர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்!


அன்னி அதற்கு ஒப்புதல் தந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்தார். அங்கே கிறித்துவ மதக் கொள்கைகளை மறுத்துக் கட்டுரை எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பினார்,