உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அன்னி பெசண்ட் அம்மையாரின்


சொற்பொழிவை முடித்தார்: தாழ்களை அகற்றினார் அங்கே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து தனது பேச்சின் தன்மையைக் கண்டு வியந்தார். தன்னால் பலர் முன்னிலையில் பேசமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்:


தாமஸ் ஸ்காட்டு அன்னியிடம் தந்த வாக்குறுதிப்படி கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததைக்கண்டார். அந்தக் கட்டுரை கிறித்துவ எதிர்ப்புக் கட்டுரை என்பதால், அது அன்னி பெயராலே வெளியிடப்படவில்லை.


இந்தக் கட்டுரையை பெசண்ட் உறவினர் ஒருவர் படித்துவிட்டார்; என்றாலும் அதன் எந்த ஒரு கருத்தையும் அவர் எதிர்க்கவில்லை. மற்றவர்கள் படித்தால் என்ன நேரிடுமோ என்று மட்டுமே வருத்தமடைந்தார்.


பிராங்க் பெசண்டிடமும், அன்னியிடமும் கட்டுரைப் பற்றி எடுத்துரைத்தார். இது போன்ற கருத்துக்களை எழுத வேண்டாம் என்று அன்னியைக் கேட்டுக் கொண்டார். அன்னி அவரது அறிவுரையை ஏற்க மறுத்து விட்டார்.


அடுத்து ஒரு கட்டுரையை அதே பாணியில் எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பி வெளியிட வைத்தார். கோவிலில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே பலர் பகை அன்னிக்கு வாய்த்தது.


அன்னி உடல் நலம் மீண்டும் பாதித்தது. அதனால் தனது மாமனார் இல்லத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றார். குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு போய் தங்கி வைத்தியம் செய்தும், உடல் நலம் பெறவில்லை.


அதனால், குழந்தைகளோடு லண்டனில் உள்ள தனது தாய் வீடு சென்றார். தக்க மருத்துவ நிபுணர்களிடம்