உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

சிகிச்சை பெற்றார். அன்னியின் உடல் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு இதய நோயும், தரம்புத் தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.


இதய பாதிப்பு உயிருக்கு ஆபத்தை உருவாக்குவது என்று மருத்துவர் கூறியதால், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு நடந்தன. தாய் வீட்டில் இருந்தவாறே மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.


பிராங்க பெசண்டிடம், மீண்டும் உறவினர்கள் திரண்டு வந்து அன்னி கட்டுரை பற்றி கடும்வாக்கு வாதம் செய்தார்கள். உடனே பெசண்ட் மனைவிக்குக்கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்:


"அன்னி உனக்கு மதக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. ஊராருக்காகவாவது நீ மதச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். கூட்டு வழிபாட்டிலும் தொடர்ந்து பங்கு பெற வேண்டும்,"


"இந்த ஏற்பாட்டிற்கு நீ சம்மதித்தால் திரும்பி வா! இல்லாவிட்டால் அங்கேயே தங்கி விடலாம்" என்று கண்டிப்பாக எழுதிவிட்டார்.


அந்தக் கடிதத்தைக் கண்ட அன்னி, ஒரு முடிவுக்கு வந்தார். மறுபடியும் கூலிகொடுத்துச் சூனியம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் கணவரிடம் திரும்பிப் போகக்கூடாது என்ற கண்டிப்பான தீர்மானித்துக்கு வந்தார்.


தனது மனதுக்குப் பிடிக்காத மதச் சடங்குகளிலும், கூட்டுக் கூட்டத்திலும் கணவனுக்காகக் கலந்து கொள்வது தனது உள் மனதுக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது என்றும், அது வெளவால் வாழ்க்கைக்குச் சமமானது என்றும் கருதி, மேற்கண்ட கண்டிப்பான முடிவை மேற்