பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அன்னி பெசண்ட் அம்மையாரின்

போதும். எழிலான சிறகுகளுடன் சிங்காரச்சிறகடித்து சுதந்தர வானிலை பறப்பதுதான் ஏற்றமிகுவாழ்க்கை! சுதந்தரம் என்பது, மனிதன் செய்ய வேண்டிய மாமல்லபுரம்: அஜந்தா, எல்லோரா, சிற்ப ஓவிய எண்ணங்களின் விலை மதிக்க முடியாத ஒன்று: மாண்பு அது! செயல் அரிதாக இருக்கலாம். உலகம் போற்றிப் புகழ்ந்து பாராட்டிடும் பயன்பாடல்லவா? அந்த அடிப்படை உரிமையை யார் பறித்தாலும் விடமாட்டேன்! என்று அன்னி தனக்குத் தானே மனதிலே சிந்தனை ஓவியமாக்கிக் கொண்டார்:


அந்த எழுச்சி எண்ணத்தோடு அன்னி தனது தாயின் வீட்டுக்கு அருகே வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக்கொண்டு, தனது மகள் மேபல் எமிலியுடன் தங்கினாள்!


வேலை ஏதாவது ஒன்றில் சேரலாம்; தகுந்த வருவாய்க்கு வழி தேடலாம் என்று பலவகையிலும் முயற்சி செய்தார்! ஆனால், அவர் முயற்சி தோல்வியே தந்தது; அதனால், தனக்குத் தெரிந்த தையல் வேலையைச் சுதந்தரமாகச் செய்தார்.


அந்த தொழிலில் போதிய வருமானம் வரவில்லை. வேறு வேலை தேடினார்: அன்னியின் மகளுக்கும் அவருக்கும் உணவும், தங்கிட இடமும் கொடுத்து மதகுரு ஒருவர் அவரை வேலையில் அமர்த்திக் கொண்டார்; ஊதியமும் அதுவாகவே அமைந்தது.


மூன்று மாதங்கள் ஆனதும், அன்னியின் தாயார் எமிலிக்கு உடல்நலமில்லை என்றதும், அன்னி லண்டனிலே உள்ள தமையன் வீட்டுக்குச் சென்று, தனது தாயாரின் அருகிருத்து, அல்லும் பகலும் பணிவிடை செய்து கொண்டிருந்தார். எமிலி உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவந்தது.


ஆனாலும், மீண்டும் எமிலி தேசப்வாய் பட்டார். மரணம் அவரை நெருங்கி விட்டதைக் கண்ட அவரது