பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35

தாயார், மகள் அன்னிக்கு எந்த ஆதரவையும் தேடி வைக்கவில்லையே என்ற கவலையுடன் மாண்டு போனார்: தாயை இழந்த அன்னியும்-ஹாரியும் கதறிக் கண்ணி விட்டார்கள்.


5. அன்னிபெசண்ட் 'நா'வன்மைக்குப்
பெர்னாட்ஷா-பிராட்லா பாராட்டு


தாயை இழந்த அன்னி நடைப்பிணம் போலவே நடமாடினார் மகன் ஆர்தர் பற்றிய மனக்கவலை ஓர்புறம்: தாய் பிரிவு மறுபுறம்: கணவனது தொல்லைகள் இன்னொரு புறம் மகள் எமிலியை எப்படி வளர்ப்பது என்ற வாட்டம் வேறோர் புறம் மத எதிர்ப்புகள் அடுத் தோர் புறம் எதிர்கால வாழ்வுக் கவலைகள் எதிர்புறம்: இவ்வாறு கவலை என்ற கடலிலே மிதக்கும் மரத் தெப்பம் போல அலைந்தது அவனது மனம்!


எந்த ஆதரவும் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கும் அன்னியைத் தேற்றி ஆதரவளிக்க இரண்டு பேர்கள் மட்டுமே இருத்தார்கள்! வேறு யாருமல்ல அவர்கள்! அன்னி எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையிலே வெளியிட்டுப் புகழ் தேடித் தந்தாரே தாமஸ் ஸ்காட், அவரும். அவரது மனைவியும் தான் அந்த இருவர்!


தாமஸ் ஸ்காட், அன்னியின் மன வேதனையிலே இருந்து மீட்டிட, தனது நூலகத்திற்கு அழைத்தார்! அன்னி, தனது மகளுடன் சென்று புத்தகங்களைப் படித்துத் தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொண்டு, தாய் வருத்தத்தை நீக்கிக் கொண்டார்.