பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அன்னி பெசண்ட் அம்மையாரின்


கட்டுரைகள், கதைகள் எழுதுவார்! அவற்றை ஸ்காட்டிடம் கொடுப்பார்! அவர் பத்திரிகையிலே தொடர்த்து வெளியிடுவார் பணம் வரும் அதைக் கொண்டு அன்னி தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்:


மகள் எமிலியை அன்புடன் வளர்ப்பார்! தாயார் எமிலி மகள் அன்னியை எவ்வாறு அருமையுடன் வளர்த்தாரோ, அதைப் போலவே தனது மகள் எமிலியையும் தாயார் நினைப்புடன் வளர்ந்து வந்தார் கூட்டுக் குஞ்சு ஒன்றைத் தாய்ப்பறவை எப்படி வளர்க்குமோ அப்படியே மகளையும் வளர்த்தார் அன்னி!


இத்தகைய இடுக்கண்கள் சூழ்ந்த நேரத்தில்தான். சார்லஸ் பிராட்லா என்ற ஒரு நாவலர் நட்பு அன்னிக்குக் கிடைத்தது. சார்லஸ் பிராட்லா யார்? .


சார்பின் பிராட்லா ஒரு சிறந்த கிறிஸ்துவமத எதிர்ப்புச் சிந்தனையாளர்: பேரறிஞர்; சிறந்த நாவன்மை படைத்த அற்புதமான சொற்பொழிவாளர்: சீர்திருத்தச் செம்மல்; மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பேசக்கூடிய வலமை வாய்ந்தவர்; ஏழைகளின் ஏந்தல்: உழைப்பாளிகளின் தோழர்!


அசர்லஸ் பிராட்லா பேசுகிறார் என்றால், கல்விமான்கள் படையே திரண்டு வந்து கேட்பார்கள்; இங்கிலாந்து நாட்டு இங்கர்சால் என்று அவரை இயம்பலாம். அத்தகைய ஒருவர் பேச்சை அன்னி இதற்கு முன்பு செவிமடுத்தது இல்லை; அவரது நட்பு அன்னிக்கு எதிர்பாரா விதமாகக் கிடைத்தது:


மூதாதையரும்-இயேசுவின் பிறப்பும் என்ற தலைப்பிலே ஓர் அரிய சொற்பொழிவை பிராட்ல ஆற்றினார். அந்தப் பேச்சைக் கேட்கும் வரய்ப்பு அன்னிக்கு ஏற்பட்டது: அன்னியை அவரது அறிவாற்றல் ஈர்த்துவிட்டது.