பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அன்னி பெசண்ட் அம்மையாரின்


பிராட்லா பேசும் கூட்டங்களுக்கு எல்லாம் அன்னி உடன் செல்வார்; அவருக்கும் பேச்சாற்றல் இயற்கையாகவே இருந்ததால் பிராட்லாவின் மாணவியானார்: அவருக்கும் மேடைப் பேச்சு விருப்பம் ஏற்பட்டது. அதற்கேற்ப ஒரு வாய்ப்பும் வந்தது!


"பெண்கள் ஆரசியல் நிலை" என்ற தலைப்பில் உரை யாற்றிடக் கட்டுறவு நிறுவனம்சார்பாக அழைப்புவந்ததை அன்னி ஏற்றுக் கொண்டார். அச்சம் தவழும் உள்ளத்துடன் பேசச் சென்றார்:


அன்னி ஆற்றிய உரையைக் கண்டு பலர் வியந்தார்கள்; பாராட்டினார்கள்! பிராட்லாவும் கேட்டார்: அற்புதம் என்று புகழ்ந்தார்: அன்று முதல் அவருடன் அன்னியும் சேர்ந்தார்! மேடைகளிலே தென்றலும்-புயலும் சேர்ந்து வீச ஆரம்பித்தன;


அன்னிக்கு எதிர்ப்புகள் மலைபோல உயர்ந்து நின்றன. போற்றுதல்களும் குவிந்தன! தூற்றுதல்களும் பெருகின! சீர்திருத்தம் பேசுவோர்க்கு உலகில் வேறு என்ன கிடைத்திருக்கின்றன; கல்லடிகளும், சொல்லடிகளும், எரிநெகுப்புகளும், நாடு கடத்தல்களும், புதை குழிகளும், சித்திர வதைகளும் தானே! அதே திலையினை அன்னியும் பெற்றார்.


இந்தவித எதிர்ப்புகளால் மனந்தளரவில்லை அன்னி! மாறாக மனவுரமே பெற்றார்! மாலைகள் வந்து குவிந்த போது மன ஆணவம் பெற்றாரில்லை; மாறாக, மேலும் உற்சாக ஊக்கமடைந்தார்:


குறிப்பாகக் கூறுவதானால், இங்கிலாந்து நாடு அன்னிக்கு பெரும்புகழைத் திரட்டி வழங்கியது எனலாம். அதேபோல, ஏளனங்களால், இகழ்மொழிகளால், வசை மழைகளால் பகையும் நெருப்பு போல எரிந்தது; புகை மூட்டங்கள் படர்ந்தன!