பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39


அன்னியின் உறவுமுறைகள் அவரை ஒதுக்கி வைத்தன! பேச்சும், போக்குவரத்தும் ஏதும் அவர்களிடம் இல்லாமற் போயின. பெண்ணல்ல இவள், மதத்தைப் புழுதி வாறித் தூற்றும் பிசாசு, சாத்தான், பேய் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து விட்டார்கள்.


ஆனால், அன்னியின் அப்பாவுடன் பிறந்த அத்தை மேரியின் பிரான்சன் மோரிஸ் என்பவர் மட்டும் அவர் வீட்டிற்கே வந்து பாராட்டி எமிலி சிறுமியைப் பாதுகாத்து வர அன்னியுடன் தங்கிவிட்டார்.


மேபல் எமிலி, கல்வி கற்க எல்லா ஏற்படுகளையும் அன்னி செய்தார்; பள்ளியில் சேர்த்தார் தனது தாய் தன்னைக் கல்வி கற்க என்னென்ன ஏற்பாடுகளைச் செய்தாரோ, அதுபோலவே மகள் எமிவிக்கும் எல்லாம் செய்தார்.


எதிர்ப்புக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி மோதியும் கூட, அன்னி அஞ்சா நெஞ்சுடன் தனது பணிகளைச் செய்து வருவதைக் கண்ட அவரது எதிரிகள் ஒன்று கூடி பிராங்க் பெசண்டிடம் சென்று கலகமூட்டினார்கள்!


பிராங்க் அன்னி மீது நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தொடுத்தார் அதில், "அன்னி மதக்கொள்கைகனில் தம்பிக்கை இல்லாதவர். அவரிடம் என் மகள் இருந்தால் தாய்ப் பழக்கமே மகளுக்கும் வந்து விடும். அதனால் என் மகள் எதிர்கால மத நம்பிக்கை கெட்டுகிடும். எனது மகளை என்னிடமே அனுப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


வழக்கும் விசாரணைக்கு வந்தது! அன்னி தனக்காக அவரே வழக்குமன்றத்தில் வாதாடினார்! இருந்தும் தீர்ப்பு அன்னிக்குப் பாதகமாகி. மகளைத் தந்தையிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பானது மகள் பிரிக்கப்பட்ட அன்னி மனம்-தீப்பட்ட புழுபோல மாறியது: