பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அன்னிக்கு வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சத் தொகையும் பிராங்க்கால் நிறுத்தப்பட்டுவிட்டது. மகள் பிரிவு ஏக்கம் வேறு இந்த நில்லயில் கீல்வாத நோகம் வந்தது அவருக்கு:


அவ்வப்போது பிரித்த இரண்டு குழந்தைகளையும் அன்னி சென்று பார்த்துவிட்டு ஒருவித மனத் திருப்தியோடு திருப்புவார். அதற்கும் பிராங்க் தடை ஏற்படுத்தி விட்டார். அத்தத் தடையை அன்னி வழக்கு மன்றத்திலே தகர்த்தார்.


இருத்தும் கூட, பிராங்க் பீடிவாதமாக, தனது பின்னைகளைப் பார்க்க வரக்கூடாது என்று சொந்த பலத்தைக் காட்டி அன்னிக்கு வேதனைகளை உருவாக்கினார்.


அதனால் அந்தத்தாய், பெற்ற பிள்ளைகனைப் போய் பார்ப்பதை அறவே நிறுத்திக் கொண்டு, என்றாவது ஒரு நாள் பிள்ளைகள் தாயைத் தேடி வரத்தான் செய்வர் என்ற நம்பிக்கையிலே இருந்தபோது, அவர்கள். கருத்து தெரித்தவுடன் தாய் பக்கமே வந்து சேர்ந்தார்கள்.


இலண்டன் பல்கலைக்கழகம் பெண் கல்வி பற்றி ஒரு திட்டம் அறிவித்தது. அது பெண்கள் படித்து ப்ட்டம் பெறுவதற்கான் கல்வித் திட்டம். அன்னி அந்தத் திட்டப்படி மெட்ரிகுலேஷன் படிப்பில் சேர்த்து முதல் தரமாகத் தேர்வு பெற்றார்.


பிறகு, தொடர்ந்து பி.எஸ்.சி. பட்டம் பெற அதே திட்டப்படி சேர்ந்த படித்தார். அவரால் அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. காரணம், மத எதிர்ப்பு செய்து வரும் அன்னிக்கு எதிரானக் கருத்துடையவர்கள் பல்கலைக் கழகத்திலே அதிகமாக இருந்தார்கன். அதனால் பட்டம் பெறமுடியாமற் போய்விட்டது.


வழக்கம் போல மேடைப் பேச்சாற்றுவதையும் பத்திரிகையில் எழுதுவதையும் மட்டும் அவர் நிறுத்தாமல்