பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43

தார். அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அவர்களது வாழ்க்கை நிலைகளை அறிந்து வருந்தினார்:


முதலாளிகள், பாட்டாளிகள் உழைப்பின் மீது மஞ்சம் விரித்துக் கொண்டு கோலாகலமாக, ஆடம்பரமாக, சீமான்களாக, கோமான்களாக வாழ்ந்து வரும் நிலைகளைப் பார்த்தார்: தொழிலாளர் மீது பரிதாபப்பட்டார். அப்போது அவருக்கு சமத்துவம் பற்றிய நினைப்பு வந்தது: எல்லாவற்றிலும் சமத்துவம் தேவை என்பதை உணர்ந்தார்!


இந்த லட்சியங்கள் அன்னியைக் கவர்ந்தன. அதனால் மேடைதோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஆதரித்தும், முதலாளிகளைக் கண்டித்தும், பொதுவுடைமை பூக்க வேண்டிய உணர்வுகளைப் பற்றியும் விரிவாகப் பேசலானார்.


அன்னி,சொற்திறம், நாவன்மை, செஞ்சொல் ஆற்றல், உணர்வுகள் அனைத்தையும் தொழிலாளர்கள் வாழ்க்கைக்காகக் காணிக்கை ஆக்கினார்.


பொதுவுடைமை அன்னியாலும் வளர்த்தது; அன்னியைப் பொதுவுடைமையும் வளர்த்தது! மக்களிடையே அன்னி மார்க்சீயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்குப் பிறகு, இங்கிலாந்து நாடே மார்க்சீயமாண்பை உணர்ந்தது!


தொழிலாளர்களும் அன்னியின் அரும் ஆற்றலைக் கண்டு அவருக்குப் பொறுப்புக்களை வழங்கினார்கள். எற்றவற்றுக் கேற்றவாறு பல திட்டங்களை அன்னி தீட்டினார்! அதற்காகப் பாடுபட்டார்.


தொழிலாளர் பல நன்மைகளைப் பெற்றார்கள்,

1. அவர்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டது.
2. தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைகள் நிறுத்தப்ப்ட்டன.