உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற பெயரில், அவரது வாழ்க்கையிலே நடந்த வரலாற்றுச் சம்பவங்களாக தொகுத்து இந்த நூலில் தந்துள்னோம்.


இது போன்ற ஒரு நூல் இதுவரை வெளிவந்ததில்லை. இந்த புத்தகத்தில் அந்த அம்மைாார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுடனும், மற்றும் இந்தியத் தலைவர்களுடனும் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காக எவ்வாறெல்லாம் போராடினார் என்ற முழு விவரத்தையும் படிக்கலாம்.


இங்கிலாந்து நாட்டிலே பிறந்த ஒரு பெண்மணி, தமிழ் நாட்டிற்கு வந்து, இந்திய மக்களின் கல்வித்துறைக்காகப் பெண்ணின் உரிமைக்காக, ஆன்மீகத் துறைக்காக, கதந்திரப் போராட்டத்திற்காக, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீராங்கனையாக விளங்கியுள்ள இந்த வரலாறு மாணவர்கள், பெண்கள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய ஒரு நூலாகும்.


அன்னி பெசண்ட் ஆம்மையார் வாழ்க்கை வரலாறும் இத்துடன் இணைந்துள்ளது. அந்த வீரர் குல மாதரசி நம்மை எவ்வாறு அவரது செயற்கரிய செயல்களால் மேம்படுத்துகிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்.


பெண் இனம் முன்னேற்றத்திற்காக அக்கறை உள்ளவர்கள் அனைவரும் பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலைப் படித்து, வழக்கம் போல பேராதரவு தருமாறு வேண்டுகிறோம்.


-பதிப்பகத்தார்