பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அன்னி பெசண்ட் அம்மையாரின்

நிலையை அரசுக்கு உணர்த்துவது தவறா?' என்று அன்னி அதே கூட்டத்தில் குரல் எழுப்பினார்.


அந்த உரிமைகளை நிலைநாட்ட ஒரு போராட்டத்தை நடத்த முன்வந்தார், இவருடைய முடிவுக்குப் பொது மக்கள் போதரவு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஒவ்வொரு ஞாயிறுதோறும் லண்டனிலே உள்ள் "டிரால்கர்" சதுக்கத்தில் வேலையற்றோர்கள் கூடவேண்டும். பேசும் பேச்சுக்களிலே ஆவர்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றார் அன்னி.


அதற்கேற்ப நூறு வேலையற்றவர்கள் அன்னி தலைமையிலே ஒன்று சேர்ந்தார்கள். அரசு தடை விதித்தது. அன்னி அதைக்கண்டு தளரவில்லை; உரிமையை நிலைநாட்டும் அந்த வேலையற்றோர் போர் தொடர்ந்து நடந்தது.


வேலையற்றோர் நடத்தும் கூட்டத்திற்கு அரசு தடை விதித்ததால், பொதுமக்களது அனுதாபம் அவர்களுக்கு ஏற்பட்டது, பத்திரிகைகளும் அரசு போக்கைக் கண்டித்தன.


அன்னி இந்தப் போராட்டத்தைப் பற்றி இணைப்பு என்ற ஏட்டில் எழுதும்போது, "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரம் எந்தப் புரட்சியை நோக்கிச் சென்றதோ, அந்தப் புரட்சியை நோக்கி நாமும் சென்று கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.


இந்தப் போராட்ட நிலை எதிர்காலத்தில் எப்படி மாறுமோ என்று எண்ணிய அரசு, நடவடிக்கையால் வேலை வாய்ப்புகள் பெருகின: வேலையற்றோருக்கு வேலைகள் கிடைத்தன!


அன்னி பெசண்ட், முன்னெடுத்த இந்த வேலையற்றோர் நலத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்!