பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47

தொடர்ந்து தொழிலாளர் வளவாழ்வின் நலன்களுக்காக தொண்டாற்றினார்.


6. மானத் தலைவியின்
பெண்ணுரிமைப் போர்கள்!


"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"
--என்று பண்டையத் தமிழகத்தின் - முதலிடை கடைச்சங்கங்களின் தென் எல்லையாகயாக விளங்கும், குமரிக் கடலோரம் நின்று கொண்டிருக்கும் திருவள்ளுவர் பெருமான் கூறினார்!


அக் குறளுக்கு உரை உரைக்க வந்த பிற்காலப் புலவர் பெருமக்கள் பலரும், பிறந்தால் புகழொடுப் பிற; இல்லையானால் பிறக்காதே அதாவது பிறவாமல் இருப்பதே நல்லது என்று எழுதினார்கள்!

ஆனால்,. அதுதான் உன்மையா? வள்ளுவர் பெருமான் இப்படியா உரை எழுதியிருப்பார்? எனவே, வேறு ஒரு பொருள் உள்ளது. அது இது?

புகழ் என்ற அதிகாரத்தில் இக்குறள் உள்ளது, புகழ் எப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு வரும்; அந்தப் புகழைப் பெற அவன் எப்படி உழைக்கவேண்டும் என்ற வழிகளை வகுத்துக் காட்டிடிய வரம்புக்கு இது ஒரு சான்றுகுறள்!

"பிறவி எடுத்த ஒரு மனிதன் வாழ்வதற்காக அவன் தோன்றும் துறைகளிலே எல்லாம் புகழ் வருமாறு தோன்ற வேண்டும். அவ்வாறு பெற முடியாவிட்டால் அவன் பிறப்பதைவிட பிறவாமல் இருப்பதே மேலானது' என்கிறார் செந்தாப் போதார்.

இந்தக் குறளுக்கு இலக்கணம் போல் அன்னிபெச்சண்ட் அம்மையார் விளங்குகிறார்! வாழ்க்கை என்ற ரோஜா