பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அன்னி பெசண்ட் அம்மையாரின்

மலரைப் பறிக்கப் பிறத்த அந்த ஆம்மையார், கரடு முரடான துன்ப, துயர, வறுமை, ஆணாதிக்க முட்களால் குத்தப்பட்டு ரணகளமான கைகளோடு காட்சித் தந்தார் அவர்!


அத்தகை ஒரு பெண், அதுவும் இரண்டு பிள்ளைகளோடு கணவனைக் கைவிட்ட ஒரு பெண், செங்கோலுக்கும் விஞ்சிய சங்கீதம் எழுப்பிய அஞ்சா நெஞ்சுடைய மதவெறி எதிர்ப்புச் சிங்கமாக நடமாடினார்!


அவர் தோன்றிய துறைகளான மதவியல், பத்திரிகைவியல், தொழிலாளர் வாழ்வியல், சமுதாய வாழ்வியல், சொற்பொழிவியல், கலப்பு மணம், விதவை மணம், இளம் வயது மணம் போன்ற பெண்ணுரிமைகளின் போரியல், அரசியல், ஆன்மீகவியல் போன்ற எண்ணற்ற துறைகளிலே தோன்றினார்! புகழோடு வலம் வந்தார். புவனத்தில் இதுதான் அரிய புகழ் பெறுவதற்கான இலக்கண வரம்பு!


எந்தெந்த துறையிலே அந்த அம்மையார் நுழைந்தாரோ, அவற்றின் ஒவ்வொன்றிலும் அருமையான் சாதனைகளை ஆற்றிப் பெயரும் புகழும் பெற்றார்.


அவரது இடைவிடாமுயற்சிகளால் தொழிலாளர்கள், வேலை இல்லாதவர்கள், மத, மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள், கணவனால் கொடுமை படுத்தப்பட்ட பெண்கள் ஆகியோர் விழிப்புண்ர்வும் நன்மைகளும் பெற்றார்கள்! மக்கள் வாழ்த்தினார்கள்!


இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற பிறகும் கூட, மக்களிடமிருந்து முழுமையான அன்பும், விசுவாசமும் வரவேற்புகளாக, வணக்கங்களாக, வாழ்த்துக்களாக வீறிட்டு வெளிவந்த பிறகும் கூட, அன்னி பெசண்ட் மனம் நிறைவு பெறாமலே இருந்தது.


அந்த மன நிறைவைப் பெற ஆன்மவியல் நாற்களைத் தேடித் தேடிப் படித்தார். இந்தப் பேரண்டத்தை இயக்கும் சக்தி எது? அந்த சக்திக்குரிய காரணம் என்ன