பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49


இந்த உண்மையை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தார். அதற்கான ஆதாரங்களைத் தேடிக் கொண்டே இருந்தார்!


வாழ்க்கை என்பது என்ன? மனம் என்றால் என்ன? இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்தபடியே இருந்தார்.


அப்போது அவரது நெருங்கிய நண்பர்களிலே ஒருவரான 'ஸ்டெட்' என்பவர், அன்னி பெசண்ட்டைத் தேடி வத்தார். இரண்டு புத்தகங்களை அவர் வைத்திருந்தார்.


'இரகசியக் கோட்பாடு' என்பவை அப் புத்தகங்கள் அவற்றை எச்.பி. பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதியிருந்தார்.


அந்த புத்தகங்களை அன்னி பேசண்டிடம் தந்து, படித்து விமரிசனம் எழுதித் தருமாறு 'ஸ்டெட்' கேட்டார் அவர் போன பிறகு அந்த நூல்கனைப் படித்தார்.


எந்த உண்மையை அறிய வேண்டும் என்று அன்னி பெசண்ட் மன நிறைவு பெறாமல் இருந்தாரோ, அந்த எண்ணம் இப் புத்தகங்களிலே இருப்பதை அறிந்து மகிழ்ச்சி பெற்றார்.


அந்த நூல்களை எழுதிய பிளாவட்ஸ்கி அம்மையார் மீது, அன்னி பெசண்டுக்கு அளவிலா அன்பும் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியினால் அந்த நூல்களுக்கு மிக உயர்வான விமரிசனங்களை எழுதினார்.


இந்த நூல்களை எழுதியவர் பிளாவட்ஸ்கி அம்மையார். இவர்தான் பிரும்மஞான சபை என்ற ஆன்மீக சபையை ஆல்காட் என்பவருடன் சேர்ந்து நிறுவியவர் ஆவார்.

அ -4