பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அன்னி பெசண்ட் அம்மையாரின்

தலைவராக்கினார்! இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது.

உலகில் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கும், இந்திய ஐரோப்பிய இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கும். மனிதனுள் மறைந்துள்ள இயற்கைச் சக்திகளை ஆய்வதற்கும்தான், அன்னி பிரும்மஞான சங்கத்தில் சேர்த்ததாகவும் கூட்டங்களிலே குறிப்பிட்டார்.

அன்னிபெசண்ட் ஞானசபையில் சேர்ந்த பிறகு, இரண்டாண்டுகளில் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானார், இந்த வருத்தம் அன்னியை மிகவும் பாதித்தது.


பிளாவட்ஸ்கி உயிரோடு இருந்த காலத்திலேயே பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாகி இருத்தன. அவர் இறந்த பிறகும் கூட, அந்த சபை பின் கிளைகள் தொய்வில்லாமல் வளர்ந்து வந்தன.


கி.பி. 1893-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உலக சமையங்களின் மாநாடு நடந்தது, உலக நாடுகளிலே உள்ள சமையவாதிகள் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தும் மாநாடு அது.


அந்த மாநாட்டில், இங்கிலாந்து சார்பாக அன்னி பெசண்ட் கலந்து கொண்டார். அவரது சமைய ஆற்றலின் ஆழமான ஆய்வை உலக அறிஞர்களும் மதத்தலைவர்களும் அவரை வானளாவ பாராட்டிப் பெருமைப்படுத்தினார்கள்.


அமெரிக்கப் புகழோடு லண்டன் திரும்பி வந்த அன்னி பெசண்டை, லண்டன் மாநகர் சிறப்போடு வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தது. யார் யார் அன்னியின் விரோதிகளோ, அவர்கள் எல்லாம் ஊமைகளாக நின்று ஆந்தக் காட்சிகைப் பார்த்தார்கள்!