நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
55
சென்னை பச்சைப்பன் கல்லூரியில், அப்போது நடை பெற்ற மாணவர்கள் கட்டத்தில் கலந்து கொண்டு சொற் பொழிவுவாற்றிய அன்னி பெசண்ட், இந்தியக் கல்விமுறையில் சீர்த்திருத்தங்கள் தேவை என்று சுட்டிக் காட்டினார்
இந்தியாவின் அவர் பேசிய சொற்பொழிவுகள், வரலாற்றுப் புகழ் பெற்றவைகளாக இருந்தன! அயல் நாட்டிலே இருந்து ஓர் அம்மையார், இந்து மதத்தைப் பற்றியும், இந்தியக் கல்வி முறைகள் குறித்தும் பேசிய உரைகளைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்திய மக்கள் வறுமையிலே வாழ்வதையும், அவர்களது தேவைகளையும்-எதற்கும் அஞ்சாமல் அவர் எடுக்கக் காட்டினார். இங்கே தங்கியிருந்து வெளிநாடுகளுக்கும் பயணம் சென்றார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா பிரான்ஸ், இத்தாலி. ஜெர்மனி, ஸ்காட்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் சென்று பிரும்மஞான சபையின் பல கூட்டங்களுக்குச் சென்று திரும்பி வந்தார்.
1893-ம் ஆண்டில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய அன்னி பெசண்ட் அம்மையார் சுமார் இருபது ஆண்டுகள் உலகெங்கும் உள்ள பிரும்மஞான சபைக் கூட்டங்களில் கலந்து கொன்டார்.
எந்தெத்த நாடுகளுக்கு அவர் சென்றாலும், ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் சபையின் ஆண்டுவிழாக் கூட்டங்களில் மட்டும் தவறாது வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
சென்னையில் பிரும்மஞான சபையை நிறுவியவர் இருவர். அவர்கள், ஆல்காட்டும். பிளாவட்ஸ்கி அம்மையார் ஆகியோர் ஆவர். ஆல்காட் பிரும்மஞான சபைத் தலைவராக இருந்தார்;