பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அவர் மரணமடைந்த பின்பு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்று உறுப்பினர்கள் யோசித்தார்கள். அதற்கு அன்னி பெசன்ட் தான் ஏற்றவர் என்று கருதி, அந்த சபை இவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரும்மஞான சபைத் தலைவரானதும், அம்மையார் இத்தியாவிலேயே, குறிப்பாகச் சென்னை நகரிலேயே தங்கி இருந்து தமிழக் அரசியலிலேயும் கவனம் செலுத்தலாதனார்.

1914-ம் ஆண்டில், ஐரோப்பாவில் முதல் உலகப் போர் மூண்டது. அதே நேரத்தில் இந்தியாவிலும் சுயாட்சிப் போர் உருவானது. இந்தப் போருக்குத் தலைமை வகித்தவர் அன்னி பெசன்ட் அம்மையாரே ஆவார்.

அன்னி பெசன்ட், 'நியூ இந்தியா' என்ற ஒரு பத்திரிகையை ஆங்கிலத்தில் துவங்கினார். அந்தப் பத்திரிகை வாயிலாகவும், ஒவ்வொரு சம்பவத்திலும் நேரில் கலந்து கொண்டும் சுய ஆட்சிக் கிளர்ச்சியை நடத்தினார்.

ஆங்கிலேயருக்கு இந்திய அரசியல் அடிமைகளாக இருப்பதைக் கன்டு உள்ளம் கொதித்த அம்மையார், அவர்களுக்கு அரசியல் கதந்திரமும், நாட்டுச் சுதந்திர உரிமையும் தேவை என்று கருதினார். அதனால், ஆங்கிலேயரை எதிர்த்தே இந்திய மக்களுக்காகச் சுதந்திரப் போர் நடத்தினார். அந்தப் போர்தான் சுய ஆட்சிப் போர் என்பதாகும்.

ஆங்கிலேயர் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். ஆங்கிலேயரை எதிர்த்தே போர் நடத்துவதைக் கண்டு-இந்தியர்களே வியந்தார்கள்! அதனால் அந்த அம்மையார் நடத்தும் சுய ஆட்சிப் போருக்கு ஆதரவு தந்தார்கள்.

அப்போது சிறையிலே இருந்து விடுதலையாகி வெளியே வந்த மராட்டியச் சிங்கமான் பாலகங்காதரத்-