நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
57
திலகர் அன்னி பெசண்ட் அம்மையார் போராட்டத்தை ஆதரித்து, அம்மையாருடன் இணைந்து அறப்போரிலே ஈடுபட்டதை இந்திய நாடும் ஆதரித்தது.
அம்மையாருடன் நீதிபதியாக் இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், தமிழ்த் தென்றல் திரு வி. கலியாணசுந்தரனார், பண்டித மேதிலால் நேரு, சுப்பராய காமத், போன்றவர்கள் சேர்த்து அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டார்கள்.
சென்னையில் அப்போது ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக் கட்சி; பல கூட்டங்களை நடத்தியது. அதில் ஒன்று ஸ்பர்டாங்க் என்ற எழும்பூர் ஏரிக் கூட்டம், அந்தக் கூட்டம் ஆதி திராவிடர்க்கென்றே கூட்டப்பட்ட கூட்டமாகும்.
கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் டாக்டர் நாயர் என்பவர் ஆவார். அவர் நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவர். அக் கூட்டத்திற்கு அன்னி பெசண்ட் அம்மையாரைச் சேர்ந்த சுய ஆட்சிக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான திரு.வி.க.வும் சென்றிருந்தார்.
திரு.வி.க., ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டத்தில் ஒரு துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தார். அந்தச் சீட்டு கூட்டத்தவரிடையே கலவரத்தை எழுப்பிவிட்டது. ஆதனால், ஜஸ்டிஸ் கட்சித் தொண்டர்களுக்கும், சுய ஆட்சிக் கிளர்ச்சியினருக்கும் இடையே கைகலப்பு, சண்டைகளை உருவாக்கியது.
அங்கே எழுத்த கலவரத்தைக் கண்ட டாக்டர் நாயர் கோபாவேசமாகப்பேசினார். அந்தக் கூட்டத்தின் கலவரம், சுய ஆட்சியினருக்கு ஆதரவாக முடிந்தது.
இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர் அரசு, சுய ஆட்சிக் கிளர்ச்சிக் கட்சியின் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் அம்மையாரையும், அருண்டேல் வாடியா என்ற இருவரையும் சேர்ந்து 16-6-1917-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது.