58
அன்னி பெசண்ட் அம்மையாரின்
அன்னி பெசண்ட்டும், அவர்தம் குழுவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டதால், நாடெங்கும் காங்கிரசார் உட்பட அனைவரும் கிளர்ச்சி செய்தார்கள். சென்னை மட்டுமல்ல; நாடே கொதித்தது.
அப்போது மக்களிடையே எழுந்த போராட்டங்களால் அன்னி பெசண்ட் அம்மையாரும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். அக் கிளர்ச்சி மக்களிடையே மேலும் சுதந்திர உணர்வை ஊட்டியது.
திரு.வி.க. நடத்தி வந்த 'தேசபக்தன்' என்ற பத்திரிகை சுயஆட்சிக் கிளர்ச்சியை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வந்ததால், சென்னை பெண்ட்லிண்டு பிரபு அரசு, 'தேசபக்தன்' அச்சக முன் ஜாமின் பணத்தை பறிமுதல் செய்தது. அதனால் இரண்டாவது முன்ஜாமின் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்னி பெசண்ட் அம்மையாரும், மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாயையும் முன் ஜாமினாகக் கட்டினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சி, மிதவாதிகள் பிடியில் சிக்கிச் சிதறிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்னி பெசன்ட், அந்தச் சிதறலை தடுத்து கய அட்சி இயக்கத்தை ஆரம்பித்தார்.
சுய ஆட்சிக் கிளர்ச்சி இயக்கம், பிரிட்டிஷ் தொடர்புடன் சுய ஆட்சி பெறுவது; இயக்கம் தடத்தும் கின்ர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாய் இருத்தல் என்ற கொள்கையுடன் அன்னி பெசண்ட் தலைமையில் போராடி வத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1917-ம் ஆண்டில் அன்னி பெசண்ட் கைது செய்யப்பட்ட நாளை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் உரிமைக் கிளர்ச்சி நாள்ளாகக் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயப் பெண் எவ்வளவு தைரியமாக, ஆங்கிலேயரையே எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிச் சிலை சென்றார் என்ற கருத்து விட, அந்த நாள் இந்தியா