உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அன்னி பெசண்ட் அம்மையாரின்

இப்போது ஒதுங்கி இருக்கிறேன். காரணம், தாங்கள் அன்னிபெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் ஆதரவு தத்து கலந்து கொண்டதுதான்!

"அந்த அம்மையாரிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. போர் காலத்தில் நாட்டில் பெரும் கிளர்ச்சி எழுமென்று ஊகித்து, அதை ஒடுக்க, பெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் தாமே வலிந்து புகுந்தார். நாடு ஏமாந்தது.

"மூன்று மாதக் காவல் அவருக்குக் கிடைத்தது என்பது வெறும் நடிப்பு: பெசண்ட் அம்மையார் ஆங்கிலேய அரசுச் சார்புடையவர். தாங்கள் அந்த அம்மையாருடன் கலந்து போராடியது குறித்து நான் வருந்துகிறேன்" என்று கேட்டார். அவர் முறையீடு வேறு சிலர் ஆதரவையும் அப்போது பெற்றது.

அதற்கு அந்த மராட்டியச் சிங்கம் பதில் கூறும்போது: "நான் தனி மனிதர் மீது கருத்துச் செலுத்துவது இல்லை: எனது தேச விடுதலைக்கு எவர் முயன்றாலும் அந்த முயற்சிக்குத் துணை நிற்பது என்ற எண்ணம் உடையவன்."

"மனிதர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்: அவர் செயலால் நாட்டில் விடுதலை உணர்வு வளர்கிறதா- தேய்கிறதா என்பதைத்தான் பார்ப்பேன். வளர்வதாக இருந்தால் துணையிருப்பேன்; தேய்வதானால் துணை போகேன்."

"அன்னி பேசன்ட் அம்மையார் உள்ளம் எத்தகையதோ, அதை ஆண்டவன் அறிவான்! அந்த அம்மையா செய்து வரும் கிளர்ச்சிகளால் நாட்டில் சுயராஜ்ஜிய வேட்கை வளர்ந்திருப்பது கண்கண்ட காட்சி; யான் விரும்புவதும் அதுவே.

அம்மையார் கிளர்ச்சி போலி என்றும், சிறை சென்றது வெறும் நடிப்பு என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். போலி