பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது, நான் காங்கிரஸ் கட்சி சார்பாக அன்னி பெசண்ட் அம்மையாரை வரவேற்கவில்லை; தொழிலாளர் சார்பாகவே வரவேற்கிறேன் என்றார். என்றாலும், அம்மையாருக்கு எதிரான துண்டு அறிக்கைகளும், மறுப்புக் கூட்டங்களும் நடந்தேறின.

தனக்கு வரவேற்பு அளித்த சம்பவத்தில் அன்னி பெசண்ட் பேசும்போது, "இத்தகைய ஒர் ஊர்வலத்தையும் வரவேற்பையும் என் வாழ்க்கையில் நான் கண்டதே இல்லை' என்று மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க அவர் நன்றி கூறினார்.

அன்று மாலை சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு வரவேற்புக் கூட்டம்; அக்கூட்டத்தில் கப்பலோட்டிய சிதம்பரமும் பேசினார்: பேசினார் என்பதை விட அம்மையாரை வசைசாடினார் என்றே கூறலாம் என்கிறார் திருவி க.

தேசபக்தர் வ. உ.சி. வசைகளை பத்திரிகைகள் வெளி யிட்டன. அம்மையாருக்கும், கூட்டத்தை நடத்திய திரு.வி.க.வுக்கும் வசைத் திரட்டுகளை சிலர் அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த நாள் அன்னி பெசண்ட் அம்மையார் கார் திரு.வி.க. நடத்தும் 'தேசபக்தன்' பத்திரிகை காரியாலயம் முன்பு வந்து நின்றது. திரு.வி.க. சென்றார். அம்மையார் திரு.வி.க.வை வண்டியில் ஏறுமாறுக் கூறியதும் காரும் புறப்பட்டது.

நேற்றைய கடற்கரையில் வ.உ. சிதம்பரம் பேசிய நிகழ்ச்சி உமக்குத் தெரியும் அல்லவா? என்று அன்னி பெசண்ட், திரு.வி.க வைக் கேட்டபோது, தெரிந்தேன்’ என்றார் ஆவர்.

"நான், சார்லஸ் பிராட்லாவிடம் பயின்றவள். எப்படிப்பட்ட வசைகளையும் தாங்குவேன்; நீர் தமிழ்ப் போத