உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்னி பெசண்ட் அம்மையாரின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கன்


1. திரு. வி. க. பாராட்டிய தியாகவல்லி


"1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை ஐரோப்பாவில் பெரும் போர் நடந்தது.


அதே காலத்தில் இந்தியாவிலும் அரசியல் உரிமைப் போர் மூண்டது. இப்போரை மூட்டியவர் யார்? ஆன்னி பெசண்ட் ஆம்மையqர்.


திலகர் பெருமான் உள்ளிட்ட தேசபக்தர் பலர் சிறைக் கோட்டம் சென்ற பின்னர் (1998) காங்கிரஸ் மிதவாதத்தில் அழுந்தியது.


அதன் உறக்கத்தைப் போக்கி அதை எழச்செய்தல் வேண்டும் என்ற வேட்கை அன்னி பெசனண்ட் அம்மையாரிடை உதித்தது அவ்வேட்கை பெருஞ் சுய ஆட்சிக் கிளர்ச்சியாகப் பருத்தது.


அதன் ஆடியில் இரண்டு கொள்கைகள் சிறப்பாக நிலவின. ஒன்று பிரிட்டிஷ் தொடர்புடன் சுயஆட்சிபெறல் வேண்டுமென்பது; மற்றொன்று கிளர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாயிருத்தல் வேண்டுமென்பது.


இவ்விரண்டு கொள்கையை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தையும் சென்னை அரசாங்கம் ஐயுற்றது; இயக்கத் தலைவரை 1917-ம் ஆண்டில் காவலில் வைத்தது.