பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அன்னி பெசண்ட் அம்மையாரின்

பெசண்ட் அம்மையார். அவர் ஒரு நாட்டவர் அல்லர்; உலகர் என்று உரைப்பதே பொருந்தும்.

இந்திய தேச விடுதலைக்கு காந்தியடிகளும் தொண்டர் பெசண்ட் அம்மைாரும் தொண்டர்; காந்தியத்தால் என்னென்ன தீமைகள் விளையும் என்று அம்மையார் விளக்கிக் கூறினார்.

“காந்தியடிகள் அளவில் அவரது சத்தியாக்கிரகப் போராட்டம் பொருந்தி வரும். அது நாட்டளவில் மற்றவர்கள் தவறாக நடந்து நாட்டைப் பாழ்படுத்துவிார்கள்' என்று அன்னிபெசண்ட் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இவ்வாறு அன்னிபெசண்ட் இந்திய அரசியலிலும், தமிழக அரசியல் துறையிலும் தலையிட்டு, இந்திய மக்களது சுதந்திரப் பிரச்னைக்காக சுய ஆட்சிப் போர் நடத்திக் கொண்டிருந்தார்.

இங்கிலாந்திலே இருந்து தனியொரு பெண்ணாகத் தமிழகத்திற்கு வந்து அரசியல் துறையிலே ஏற்கனவே அரும்பாடுபட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வீரம்செறிந்த போராட்ட உணர்வுகளை மக்கள் இடையே எழுப்பிப் போராடி வருவதைக் கண்ட அரசியல் அழுக்காறுகளுக்க மன எரிச்சல் நெருப்பாக மாறியது.

அன்னி பெசண்ட் போராட்டத்திற்கு திலகர் பெருமானின் பேராதரவும், காந்தியடிகளின் பிணக்கமற்ற ஒத்துழைப்பும். முகமதலி ஜின்னாவின் தீவிர ஆதரவும் அகில இந்திய அளவில் மோதிலால் நேரு உணர்ச்சி உந்தலும் அன்னி பெசண்ட்டுக்கு திரண்டு குவிந்ததைக் கண்ட, இந்திய மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு வயிற்று கண்டது!

தமிழ் மாநில அளவில் தமிழ்த் தென்றல் திரு.வி.க., காமத், டாக்டர் ஜி. சுப்பிரமணி ஐயர் போன்ற ஜட்ஜ், வழக்குரைஞர்கள் கல்வியாளர்கள், ஆன்மீகவியல் நேயர்-