பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அன்னி பெசண்ட் அம்மையாரின்


இந்தக் கருத்தை மக்களுக்கு விளக்கவே-இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். "இந்தியாவிலே உள்ள செல்வச் சீமான்களும், கல்விக் கோமான்களும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைத் தாராளமாக வழங்கினால்தான், இந்தியருக்குரிய கல்வி முறையை உருவாக்க முடியும்" என்று சுற்றுப்பயணம் செய்த இடங்களில் எல்லாம் வலியுறுத்தினார்!

அன்னி பெசண்ட் கருத்தைக் கேட்ட பணக்காரர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களில் சிலர் தாராளமாகப் பண உதவிகளைச் செய்தார்கள். இதைக் கண்டு அம்மையார் மனம் மகிழ்ந்தார்.

காசி நகரில், 'மத்திய இந்துக் கல்லூரி' என்ற ஒரு கல்லூரியை அமைத்தார். அன்னி பெசண்ட் உருவாக்கிய அந்தக் கல்லூரிதான் அளித்து இன்று காசி இந்துப் பல்கலைக் கழகமாக உள்ளது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

பெசண்ட் மாதப் பத்திரிகையைத் துவக்கினார் அல்லவ அது ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த ஏடு இந்தியரது கல்வி முறைக்காகவே உழைத்தது.

கல்லூரியின் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல! கடல் கடந்தும் புகழ் பெற்றது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வருகை தந்தபோது, அவர் அக்கல்லூரியைக் கண்டு பாராட்டினார்.

அந்தக் கல்லூரி நாளடைவில் வளர்ந்து பல்கலைக் கழகமாகப் புகழ் பெற்றபோது அந்த அம்மையாருக்கு அது டாக்டர் என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை