பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அன்னிபெசண்ட் தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு; திரு வி.க விடம் வந்து தாசிகள் யார்? தேவடியாள் யார்? இந்தக் கடிதத்தில் எழுதியுள்னதைப் பாருங்கள் என்று கடிதத்தைக் காட்டினார்.

அதற்கு திரு.வி.க. ஆங்கிலத்தில் அம்மையாருக்குக் கறும்போது Fallen.sisters என்றார்! அன்னி சிரித்து விட்டு அந்த மாநாட்டிற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்புமாறு கூறினார்.

இளம் வயது சிறுமிகள் திருமணம் இந்தியாவில் பழங்காலத் தொட்டு நடந்து வரும் ஒன்று. அதை ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் எதிர்த்து ஒழிக்கப்பாடுபட்டதை அம்மையார் அறிந்த ஒன்று, அதனால் இளமை மனம் நடை பெறுவதை அம்மையார் எதிர்த்தார்!

சிறு வயதில் இளமை மணம் செய்யப்பட்ட சிறுமிகள் அவர்கள் கணவர்கள் என்று கூறப்படும் சிறுவர்கள் இறந்துவிட்டால் ஒன்று உடன்கட்டை ஏற்றுவர்கள்! அல்லது வெள்ளைப் புடவையைக் கொடுத்து, மொட்டையடித்து கைம்பெண் அதாவது விதவை என்று பெயரிட்டுக் கொடுமைப்படுத்துவதையும் அன்னிபெசண்ட் நேரிலேயே பார்த்தார்.

அதனால் விதவைகள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் வளர வேண்டும் என்பதற்காக எழுதினார்: பேசினார்.சில செய்தும் வைத்தார்; அதற்கு பிரும்மஞான சயை ஆதரவு உண்டு என்று தீர்மானம் போட்டார்.

பிரும்மஞான சபை, உலகளாவிய. உலக சகோதர நேயத்தை அறிவுறுத்தும் சபையாகும். அதன் தலைவி அன்னிபெசண்ட் அம்மையார். அவர் பிறப்பில் உயர்வு தாழ்வு ஒழித்தார்; கலப்பு மணத்தைச் செய்ய முன்வரு-