உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69

வோரை பிரும்மஞான சபை ஆதரிக்கும், ஆதரவு தரும் என்று எழுதினார்; பேசினார்.

சென்னையிலே கலாசேத்திரா பகுதியிலே போனால் ருக்மணி அருண்டேல் என்ற பெயரில் ஒரு வீதினயைவே பார்க்கலாம். அதன் வரலாறு என்ன? இதோ:

அருண்டேலும்- ருக்மணியும் ஒருவரை ஒருவர் உணர்ந்து காதலராயினர். இவர்களது கலப்பு மணம் பிரும்ம ஞான சபையிலே நடந்தது. அப்போது இத்த திருமணத்தை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன.

சென்னையிலே மட்டுமன்று தென்னாடு முழுவதுமே கிளர்ந்து எழுந்தது. 'ஹிந்து' என்ற ஆங்கில ஏடு அந்தக் கிளர்ச்சிக்கு எண்ணெய் வார்த்து எழுதியது: “சுதேச மித்திரன்“ பத்திரிகைக்கு வீரமே வீறிட்டது.

கப்பலோட்டிய தமிழன் எனப்படும் வ.உ.சி.; கோபாவேசங்கொண்டு எதிர்ப்புத் துண்டு அறிக்கைகனை வெளி யிட்டுக் கிளர்ச்சி செய்தார். கடற்கரையிலே கூட்டங்களைக் கூட்டிக் கண்டித்தார்.

இத்த திருமணத்தை தடத்தும் பிரும்மஞான சபையையையும், அன்னி பெசண்டாரையும், திரு.வி.க. போன்ற தமிழரையும், அருண்டேல் என்ற கலப்பு மணமகனையும் மனம்போனபடி வசை பொழிந்து சாடினார்!

அவருக்குப் பிறகு கப்பிரமணியம் சிவா என்ற பெருமைகுரிய மற்றொரு தேசபக்தர் பொங்கி எழுந்து கொந்தளித்தும் பேசினார். திரு.வி.க.வின் பத்திரிகைக் காரியாலயத்திற்கு ஓடினார்!

சிங்க நோக்குடன் சிவா கர்ஜித்து, "ஒரு வெள்ளைக்காரன் அருண்டேல், நம் சென்னைப் பெண்ணை களவாடுகிறான்.