பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அன்னி பெசண்ட் அம்மையாரின்

அதை முதலியாரே நீர் ஆதரிக்கிறீரா?” என்று முழங்கினார்!

"அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது: காதல் நுட்பம் உங்களுக்குத் தெரியவில்லை; இந் நுட்பத்தை உணர்த்து கொள்ளாமலே நீங்கள் காலம் கழித்து விட்டீர்கள்,"

"காதல் கண்ணுக்கு வெண்மை-கருமை தோன்றுமோ காதல் நுட்பம் உணராதவர்கள் எப்படி நாட்டின் விடுதலைக்கு உழைத்தல் கூடும்? களவுதான் காதல், தொல்காப்பியத்தைப் பாருங்கள்."

"உங்களுக்கு அன்னி பெசண்டின் அரசியலில் மனம் செல்வதில்லை. அதனால், "அருண்டேல்-ருக்மணி மணத்தையும் தூற்றுகிறீர்கள்" என்று விளக்கினார். சிவாவுக்கு கோபச்சிரிப்பு தோன்றி திரும்பினார்.

பிறகு ருக்மணி அருண்டேல் திருமணம் நடந்தது. தொழிலாளர் சங்கத்துக்கு அழைத்து வந்து தம்பதிகளுக்கு திரு.வி.க. வாழ்த்துக் கூறி அனுப்பினார்.

பெண்ணுரிமைகளைப் பேணுவதற்கும். அவர்களை விழித்தெழச் செய்வதற்கும் ஓர் பெண்ணின அமைப்புத் தேவை என்று அன்னி பெசண்ட் பேசும்போது குறிப்பிடுவார். அத்தகைய அமைப்பு ஒன்று உருவாக யோசித்தார்.

அன்னி பெசண்ட் முயற்சியால் ஓர் அமைப்பு ஏற்பட்டது. அதற்கு, மாதர் இந்திய சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. அச்சங்கத்தின் முதல் தலைவராக டாக்டர் அன்னிபெசண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு அடிமையாக அடங்கி ஆமைபோல, ஊமை போல வாழ்ந்த பெண்குலம்; தனது