பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71

உரிமைகனைத் தட்டிக்கேட்கும் தைரியம் வரப்பெற்றதால், பெண்ணினம் அன்னி பெசண்ட் அம்மையை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.

எந்தத் துறையில் புதுப்பது முயற்சிகளை எடுக்கின்றாரோ அன்னி பெசன்ட் அந்தத் துறை எக்காரணம் கொண்டும் தோல்வியுறுவதில்லை. மென்மேலும் அத்துறைகள் ஓங்கியே வளரும் தன்மையிலே சிறக்கும்.

மாதர் இந்தியச் சங்கம் சென்னையிலே மட்டுமன்று, இந்தியா முழுவதும் கிளைகள் பெருகி நன்கு வளர்ந்து போராட்டங்களை இன்றும் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மாதர் இந்தியச் சங்கத்தில் படித்த பெண்கள், குடும்பப் பெண்கள், பணியாற்றும் பெண்கள், உட்பட்ட பலர் உறுப்பினர்களாகி, தங்களுடைய எந்த ஒரு பிரச்னைகளையும் தீர யோசித்து உரிமைகளைப் போராடியோ புத்தி துட்பத்தாலோ-இன்றும் அடைந்து வருகிறார்கள்.

ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் தகுதி, திறத்திலே குறைந்தவர்கள் அல்லர் என்பதற்கு, மாதர் இத்தியச் சங்கத் தலைவரே ஓர் எடுத்துக்காட்டல்லவா?

எனவே, பெண்களை வாழ்விக்கும் கலப்புமணம்; விதவை மணம் போன்றவைகட்கும் குருகுலமாகத் திகழ்ந்தது பிரும்மஞான சபை இளமை மணத்தை எதிர்த்துப் போராடியது, பெண் உரிமைகளுக்காக மாதர் சங்கம் கண்டது; இந்திய மக்களுக்கு சுய ஆட்சி உணர்வை ஊட்டியது; இந்தியக் கல்வி முறையில் புதிய முறையைப் புகுத்தியது; தாய் மொழியிலே கல்வி பெறும் முறை இருக்க வேண்டும் என்றது: இந்து பல்கலைக்கழகம்