பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அன்னி பெசண்ட் அம்மையாரின்

ஆரம்ப பெண் பாடசாலை ஆதிதிராவிடர் முன்னேற அவர்களுக்குரிய பள்ளிக்கூடம், ஆன்மீக மறுமலர்ச்சிச் செயல்கள் போன்ற துறைகளிலே அன்னி பெசண்ட் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டார்.

பெண்களுக்கு இந்த சமுதாயம் செய்யும் கொடுமைகளை, ஒவ்வொரு பெண்ணும் தனது மானத்துக்கு விடும் அறை கூவலாகக் கருத வேண்டும்!

அத்தகையச் சவால்களோடு பெண்கள் தன்மானத்துடன் போராடினால் இந்தச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வோரு பெண்ணும் நாணக் கவசம் பூண்ட மானத் தலைவியாக வாழமுடியும் என்பதற்கு அன்னி பெசண்ட் ஒர் எடுத்துக்காட்டு அல்லவா?


7. ஞானத் தாமரை வானில் பூத்தது

ஆங்கிலேயர் வருகையால்; ஆட்சியால், இந்திய நாகரீகம்: கலை, பண்பாடுகள், அரசியல் வரலாறு, ஆன்மீகப் பழக்க வழக்கச் செயல்கள் எல்லாமே மாறிவிட்டன என்பதை, இந்தியாவிற்கே நாரில் வந்து பார்த்த அன்னி பெசண்டுக்கு மாறா வடுவான ஆறாப் புண்ணாகவே அப்போது தென்பட்டது.

வெள்ளையன் வீசி எறிந்த பதவி, பணம், பட்டம், உத்தியோகம், பகட்டுவாழ்வு என்ற எலும்புகள் அனைத்திற்கும் அதனதன் தகுதிக்குரியவர்கள் அடிமைகளாக மாறி உழைத்தார்கள்.