பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அவர் காவலில் வைக்கப்பட்ட நாள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டது.


ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் கூடும்; கூட்டங்கள் அமைதியாக-மிக அமைதியாக நடைபெறும். ஒரு மூலையிலாவது சிறு குழப்பமோ, துளி இரத்தஞ் சிந்தலோ நிகழ வில்லை.


சென்னையில் பல வட்டங்களில் விழாக்கள் நடைபெறும். சிலவற்றில் சிறியேன் சேவையும் சேரும்.


பெசண்ட் அம்மையாரின் பேச்சும், எழுத்தும் மூன்று மாதக் காவலும் இந்தியாவை ஒருமைப்படுத்தின; இங்கிலாந்தில் பார்லிமெண்டில் 'இந்தியாவுக்கு ஜனப் பொறுப்பாட்சி நல்கப்படும்' என்ற அறிக்கையை 1917-ஆகஸ்டில் பிறப்பிக்கச் செய்தன.


சிறையினின்றும் வெளிவந்த திலகர் பெருமான் துணை அம்மையார் இயக்கத்துக்குக் கிடைத்தது. காந்தியடிகளும் பிணங்கி நின்றாரில்லை. ஜின்னாவின் இணக்கம் இயக்கத்துக்குப் பேராக்கம் தந்தது.


1947-ம் ஆண்டின் இறுதியில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸுக்குத் தலைவராக நாடு பெசண்ட் அம்மையாரைத் தெரிந்தெடுத்தது.

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், முதல்பகுதி)


-என்று, தமிழ்ப் பெருமக்களால் தமிழ்த் தென்றல் திரு.வி.க என்று உளமார அழைத்துப் போற்றப்பட்ட திரு.வி. கலியான சுந்தரம் அவர்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொண்டுகளைப் பாராட்டி, தனது வாழ்க்கைக் குறிப்புகள் என்ற புத்தகத்திலே எழுதியுள்ளார்!


எழுதியவர் எத்தகையவர் என்பது ஓரளவாவது தெரிந்தால், எழுதப்பட்டவர் எப்பேர்பட்டவராக இருந்திருப்பார்