பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அன்னி பெசண்ட் அம்மையாரின்


'இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதி மொழியை ஆங்கிலேயர் அரசு தரவேண்டும். தராவிட்டால் போரில் எந்த உதவியையும் செய்ய மாட்டோம்!' என்று, இந்தியத் தலைவர்கள் ஒருமித்தக் குரலில் பேசினார்கள்.


அன்னி பெசண்ட் அம்மையார், இந்தியத் தலைவர்கள் எண்ணத்திற்கு நேர் விரோதமாக இருந்தது "பிரிட்டிஷ் அரசு உறுதி மொழியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு உதவிட வேண்டும்" என்று பெசண்ட் குரல் கொடுத்தார். ஆனால், மக்கள் அவர் கருத்தை ஏற்க மறுத்து விட்டார்கள்.

கூறிய கருத்தையே மீண்டும் கூறிக் கூறிப் பெசன்ட் அறிக்கை விடவே, அந்த அம்மையாரை ஆதரித்தவர்கள் யார் யாரோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். இருந்தும் பெசண்ட் பிடிவாதமாகவே பேசினார்; எழுதினார்;

பெசண்ட் பக்கம் ஆதரவு காட்டியவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால், அன்னி பெசண்ட் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கு கய ஆட்சி தேவை என்பதை மட்டும் பேசிக் கொண்டே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியிடம் அன்னி பெசண்ட் கருத்து மீது வேறுபாடு இருந்தாலும், அவரைக் காங்கிரஸ் மறக்கவில்லை; மக்களும் மறக்கவில்லை.

கல்கத்தாவில் தடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக்கு அன்னி பெசண்டை மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்; மக்களும் மகிழ்ந்தார்கள்.