பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79


அவர் உருவாக்கிய பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அந்தப் புகழாவது மாணவர்கள் இடையே நாள்தோறும் இணைக்கப்பட்டிருக்கக் கூடும்! அதுவும் நடைபெறவில்லை!

இறுதிக் காலத்தில் அவரது உடல் நிலை காசிக்குப் போக முடியாமல் போய்விட்டது. அதனால், அவர் 1913-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதியன்று வான வெளியிலே ஞானமாகக் கலந்து விட்டார்.

அன்னி பெசண்ட் மறைவைக்கேட்ட மக்கள் கண்ணர் சிந்தினார்கள். பரிதாபமாக அழுகுரல் எழுப்பியது பிரும்மஞான சபை!

இங்கிலாந்து நாட்டிலே பிறந்து, இங்கிலாந்திலேயே வளர்ந்து, இங்கிலாந்திலே வாழ்ந்து இறுதி நாற்பதாண்டுகளாக இந்திய மக்களுக்காகப் போராடி, இந்திய மக்கள் விடுதலைக்காக, பிறந்த நாட்டு மண்ணின் வெள்ளைக்கார ஆட்சியை இந்தியாவிலே எதிர்த்து, சிறைத் தண்டனைகளை அனுபவித்து, பெண்ணுரிமைப் போர்களை நடத்தி பெண்களுக்காக மாதர் சங்கம் ஒன்றை முதன் முதலில் நிறுவிய மூதாட்டிப் பெருமகள் அன்னி பெசன்ட் அம்மையார்!

தன்னலம் விரும்பும் அரசியல் துறையில் எந்தவித விருப்பும் வெறுப்புமற்ற நிலையில் அன்னி பெசண்ட் வாழ்ந்தது அரசியல்வாதிகளுக்கு ஒரு மனப்பாடமாக இருக்கின்றது.

மூதறிஞி, மூதாட்டி, ஞானப் பெருமாட்டி, அறிவுச் சீமாட்டி, சுதந்தரப் பிராட்டியாக வாழ்ந்த அன்னி பெசண்ட் மறைவு இந்திய மக்களின் இதயத்தைத் துளைத்துவிட்டது.