பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

3

என்ற அருமை, பெருமைகளை நம்மால் உணர முடியும் இல்லையா?


திரு.வி.க. அவர்கள் தமிழில் தன்னிகரற்ற மேதைகளிலே ஒருவர்; அவர் எழுத்துக்கள், பீடும்-மிடுக்கும், எழுச்சியும்-கிளர்ச்சியும், வீறும் வீரமும் மதர்ந்து ஏக்கழுத்தம் பெற்றதாக விளங்கும்!


அவர் தமிழ் நடையிலே காவியச்சுவை கற்கண்டு பிறப்பெடுக்கும்; வீரச்சுவை காரத்தைவிட கடுமையாகத் தாண்டவமாடும்; நகைச்சுவை கரும்புச் சாறென பொழியும்; சாதுச்சுவை கருணையாக நடமாடும்; சமயச்சுவை உள்ளத்தை உருக்கும்; அரசியல் சுவை தென்றலென கவரி வீசும்; இதற்கு மேலும் பற்பலச் சுவைகள் அவர் சொற்பொழிவிலே மின்னலென பளிச்சிட்டு ஒளிகாட்டும்!


இத்தகைய சுவைகள் ஒருங்கே திரண்டு உருவமெடுத்த பல்கலை வித்தகர் தான் திரு.வி.க என்று அழைக்கப்பட்ட கருனைப் பொதிகைமலையாகக்காட்சி தந்தவர் திரு.வி.க


தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தொழிலாளர் தலைவராக விளங்கியவர்: வெள்ளையர் அரசு அவரை நாடு கடத்த ஆணையிடும்போது அப்போதைய முதலமைச்சர் பனகல் அரசரும், தியாகராச செட்டியாரும் ஜஸ்டிஸ் ஆட்சியைக் கலைக்கப் பதவிகளைத் துறப்போம் என்று ஒரு காங்கிரஸ் தலைவருக்காக முன்வரக் கூடிய அளவிற்கு திரு.வி.க பண்பின் பெட்டிகமாகச் சிறந்தார்.


அத்தகைய ஒர் அன்பாளர், பண்பாளர், அரசியல் வித்தனர், தொழிற்சங்கப் போராட்டத் தந்தை காங்கிரஸ் மேதைகளுள் மேதை, கனிந்த சொற்பொழிவாளர்; இனிய எழுத்தாளர்; வீரத்தில் அரிமாவாக விளங்கியவர், பத்திரிகைப் பேராசிரியர், இவை போன்ற அரிய செயல்கனை ஆற்றிய திறனாளரான திரு வி.க, அவர்களால் பாராட்டப்