இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
அன்னை கஸ்தூரிபாயின்
தனது கணவரின் லட்சியம், அரசியல், மரியாதை, போராட்டம், மக்களது உரிமைகள் மீட்பு என்பதை மட்டுமே புரிந்து, தனது கணவர் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் உண்மை, சத்தியம், நியாயம் இருக்கும் என்று தனது புருஷன் சொல்லே வேதவாக்கு என்று நம்பி அவர் சிறை புகுந்தார்!
இதற்குப் பிறகு தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது. இந்தியருக்கு விரோதமான சட்டங்களை ஆங்கிலேயர் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அன்னை கஸ்தூரி பாய் விடுதலை செய்யப்பட்டார்!
இந்த சேவை மனப்பான்மை நிறைந்த தொண்டுள்ளத்துடன் எண்ணற்ற செயல்களை இந்திய விடுதலைக்காகச் செய்து மறைந்தவர் அன்னை கஸ்தூரிபாய் காந்தி. அந்த மாதரசியின் வரலாற்றை தொடர்ந்து இனி காண்போம்.