பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’
கஸ்துரிபாய்!

குஜராத் மாநிலத்தில் போர் பந்தர் என்பது ஒரு சிறுநகர். அங்கே வாழ்ந்தவர் கோகுல்தாஸ் மாகன்ஜீ. அவருடைய மனைவியின் பெயர் விரஜகும் பா. இவர்களின் மூத்தமகள் தான் கஸ்தூரி பாய். இவர் 1869-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலே அந்த நகரிலே பிறந்தார்! காந்தி அடிகளாரை விட வயதில் ஆறுமாதம் மூத்தவர் அன்னை கஸ்தூரி பாய்.

சிறுவயதில் பெற்றோருக்கு இவர் செல்லக் குழந்தை. பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டாரா என்றால் அதுவுமில்லை; செல்லக் குழந்தை அல்லவா? அதனால் ஆனால், குடும்ப வேலைகளை எல்லாம் அக்கறையாகவும், அழகாகவும் செய்யும் திறமை மட்டும் அவருக்கு இருந்தது.

கஸ்தூரிபாய் பிறந்து வளர்ந்த போர் பந்தர் சிறுநகரிலேயே கரம்சந்த் காந்தி என்ற வைசியர் ஒருவரும் வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவிகள் நான்கு. நான்காவது மனைவி பெயர் புத்லிபாய். இவர்கள் இருவருக்கும் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள், இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் மகாத்மா காந்தி அடிகள் என்ற மோகன்தாஸ் காந்தி.

காந்தியின் தந்தையாரும், கஸ்தூரிபாய் தந்தையாரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. அதனால் இருவரும் கலந்து பேசி காந்திக்கும் - கஸ்தூரிக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.