பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்னை கஸ்தூரிபாயின்


மனைவி மீது சந்தேகம் வந்து விட்டாலோ அவள் வாழ்க்கை அடியோடு நாசம்தான். அவளுக்கு வாழ்க்கை வேறு ஏது?. எங்கே போவாள்?

மனைவி விடுதலை கேட்டுச் சட்டத்தின் துணைகொண்டு நீதி மன்றம் செல்வாள்! அந்தச் சட்டங்களல் அவளுக்குரிய வாழ்வு கிடைத்துவிடுமா என்ன?

"நான், அன்று என் மனைவி கஸ்துரி பாயை இத்தகைய ஒரு கொடுமைக்கு ஆளாக்கி விட்டதை எண்ணி இன்றும் சொல்லொணா வேதனையால் வருத்தப்படுகிறேன். எனக்கு மன்னிப்பு ஏது? என்று காந்தியடிகள் கஸ்தூரி பாயின் அன்றைய நிலையை உணர்ந்து கண்ணீர் வடித்து வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.

ஆனால், அன்னை கஸ்தூரி பாய், இந்த அக்ரமங்களை எல்லாம் வள்ளுவர் பெருமான் கூறியபடி ’அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ பொறுத்துக் கொண்டார்! அதனால் காந்தியடிகளுக்கு மனைவி மீது ஒரு கருணை ஏற்பட்டது. தீ நட்பால் கெட்டு விடாதே என்று தந்தை எச்சரித்த போதும், தாய் கண்டித்தபோதும், தமையன் கண்டனம் செய்த போதும் கேளாத காந்தியடிகள், இறுதியில் தனது மனைவி கஸ்தூரி பாய் கண்டித்ததற்காக அவருக்கு அக்கிரமமாக தண்டனை வழங்கி’,’பிறகு தன்னையே தான் உணர்பவந்தான் மனிதன்’ என்ற தத்துவ வாதியாக மாறினார்!

மனைவி சொல்வதைக் கேளாத காரணத்தையும், அதனால் ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் ஒரு தாளில் எழுதி, தனது தந்தையிடம் கொடுத்து, தீய நட்பால் உருவாகிய துன்பங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்!

xxx