பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அன்னை கஸ்தூரிபாயின்


அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இளம் தம்பதிகள் இருவருமே மீளா வேதனையிலே வருத்தப்பட்டார்கள்!

காந்தி, கி.பி.1888-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்விலே தேறினார். இதைக் கண்ட அவரது தமையனும், குடும்ப நண்பர்களும் அவரை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி சட்டத்துறையிலே பாரிஸ்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

வெள்ளைக்காரன் நாட்டுக்குக் காந்தி படிக்கப்போவதை, காத்தியின் வைசிய குல மக்கள் எதிர்த்தார்கள்! தாயும், தமையனும் காந்தி மேல் நாட்டு மோகத்திலே சிக்கி வழி தவறிப் போய்விடும் நிலை ஏற்படுமோ என்று பயந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் காந்தி ஆறுதல் கூறி, ஒருக்காலும் ஒழுக்கத்தை விட்டு நழுவமாட்டேன் என்று சத்திய வாக்கு கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.

அந்த நேரத்தில் கஸ்தூரிபாய் தனது பிறந்த வீடான ராஜ்கோட் நகரில், இரண்டாவது ஆண் குழந்தையுடன் இருந்தார். கணவன் மீதுள்ள பாசத்தால், அவரைப் பிரிகிறோமே என்று மனம் கலங்கினார்.

காந்தி பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்புவதற்கு முன்பே புத்லி பாயும் மறைந்தார். தாயார் இறந்து விட்ட செய்தியை, படிப்பு வீணாகிவிடக் கூடாதே என்ற கவலையால் இங்கிலாந்திலே உள்ள காந்திக்கு அவரது தமையனார் உடன் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்தியாவுக்கு வந்த பிறகு தான், அவரது தாயார் மரணத்தை காந்தி அறிந்து மிகவும் வருந்தினார்.

பாரிஸ்டராக காந்தி திரும்பி வந்தார்; குடும்பத்தில் தந்தையில்லை தாயுமில்லை; மீண்டும் கஸ்தூரி பாயுடன் குடும்பம் நடத்தினார். முன்பு எப்படி மனைவிக்குத்