பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அன்னை கஸ்தூரிபாயின்


என்று நீ எண்ண வேண்டும்; முகம் சுளித்தால் உன் முகத்தில் நான் விழிக்கமாட்டேன்' என்று அதட்டிப் பேசுவார் காந்தி,

இந்தக் குடும்பச் சூழ்நிலைகளை இதற்கு முன்பு கஸ்தூரி பாய் அனுபவித்தவர் இல்லை! அதனால் அவருக்கு இவரது பொது வாழ்க்கை தொல்லைதரும் அனுபவங்களாக இருந்தன. இருந்தாலும், கணவன் என்ற முறையிலே அவர் இடும் கட்டளைகளை ஏற்று உழைத்துத் தேய்ந்து வந்தார் கஸ்துரி பாய்.

காந்திக்கு வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்தது. அந்தப் பணம் எல்லாம் காந்தியின் செயல்களால் செலவாகும் நிலையும் ஏற்பட்டது.

கஸ்தூரி பாய் கூறும் குடும்ப கஷ்டங்களைச் சிந்தித்தார்; செலவாகும் வழிகளைக் குறைத்தார்; தனது வாழ்க்கையை எளிமையாக நடத்தி வரப் பழகினார் காந்தி.

காந்தியின் வீடு நாகரீக முறையில் கட்டப்பட்டது தான் என்றாலும், அந்த வீட்டில் கழிவு நீர் போக நல்ல சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு அறையிலும் சிறுநீர் கழிப்பதற்கு ஒவ்வொரு மண் சட்டிதான் இருக்கும். விருந்தாளிகளாக வந்து தங்கியிருப்பவர்களின் மண் சட்டிகளை எல்லாம் கஸ்தூரி பாய் தான் எடுத்து வெளியே கொட்டிச்சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்தி கட்டளையிடுவார் கஸ்தூரிபாய்க்கு இந்தப் பணிகளை எல்லாம் இதற்கு முன்பு செய்து பழக்கம் இல்லாததால் அவர் மனம் தீராத வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் ”இது என்ன அருவருப்பான வேலை? அவரவர் மண்சட்டிகளை அவரவர் சுத்தப்படுத்திடக் கூடாதா? இதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்பது எனது தலை எழுத்தா?" என்று கேட்டுவிட்டார் கஸ்தூரி பாய்.